Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Wednesday, April 21, 2010

"லீவு விட்டாச்சு"

வீடு பெருக்க ஒப்பவில்லை
தனியாகத்தானிருக்கிறேன்
அதனால் குப்பையில்லை.

தினங்கள் நான்காயிற்று
வீடு பெருக்க ஒப்பவில்லை
தூசியில்லாமலில்லை.

புறப்படுகையில்
அவள் விட்டெரிந்த முடிச்சுருள்
மகள் நிராகரித்த க்ளிப்புகள்
மகன் கலைத்திட்ட பொம்மைகள்
வீடு பெருக்க ஒப்பவில்லை.

8 comments:

  1. //புறப்படுகையில்
    அவள் விட்டெரிந்த முடிச்சுருள்
    மகள் நிராகரித்த க்ளிப்புகள்
    மகன் கலைத்திட்ட பொம்மைகள்
    வீடு பெருக்க ஒப்பவில்லை.
    //

    அற்புதமான கவிதை

    நிறைய எழுதுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி வேலு,
    அப்ப லேபில்லே 'கவிதை' ன்னு போட்ரலாமா?

    ReplyDelete
  3. @yuva
    //அப்ப லேபில்லே 'கவிதை' ன்னு போட்ரலாமா?//
    கவிதைதாங்க! நல்லாருக்கு!

    ReplyDelete
  4. அற்புதமான கவிதை. துணைவியார் திரும்பியதும்
    வீட்டு வாசலிலேயே இந்த கவிதையை காண்பிக்கவும்.

    மேலும் நிறைய எழுதவும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்களோட இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருந்ததுங்க!

    ReplyDelete
  6. நன்றி பாலா,
    நல்ல யோசனை. செயல்படுத்தி பார்ப்போம்.


    நன்றி மோகன்,

    வருகைக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  7. :)

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  8. நன்றி டைரக்டர்,
    வருகைக்கும், சிரிப்புக்கும்.

    ReplyDelete