Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Sunday, April 11, 2010

கண்டேன் (என்) கடவுளை.

போன ஜனவரி மாதயிறுதியில் இறங்கினேன் கலிஃபோர்னியாவில்(CA). லாஸெஞ்சலஸ்(LAX) விமானநிலையம். பல ஹாலிவுட் ஜாம்பவான்கள் கால் பதித்தயிடமானாலும் நான் யாரையும் பார்க்கவில்லை அன்று. பனிபொழிவில்லை, குளிரிருந்தது. ஏற்கனவே கூகிலாண்டவரிடம் வரம் வாங்கியவாறு 'புளூ' காப்ஸில் ஏறியமர்ந்தேன். அந்த கருப்பு அமெரிக்கரின் ஸ்லாங்கில் நம்பிக்கையில்லாமில்லை, ஆனலும் பிரிண்டவுட் காமித்து சேரவேண்டிய இடத்தை அவரிடம் உறுதிசெய்தப்பின்னரே பெல்டையணிந்து தளர்ந்தேன் சீட்டில்.

அடைந்தயிடம் ஹயட் ஹோட்டல், அனஹெம்(Anaheim). ஒருநாள் ஓய்வு-ற்குப்பின் நான் வந்த வேலையை கவனித்தேன். வேறொன்றுமில்லை ஒரு டெக்னிக்கல் கான்ஃபிரன்ஸ் ;அலுவலக சம்பத்தபட்ட சிலபல வேலைகளை முடித்தேன் முதல் இருநாட்களில். மூன்றாவது நாளில் அம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி; சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் காமரூன் (Jamesh Cameron). வாவ்... என் கனவுக்கடவுள் (அ) கனவின் கடவுள்.

நிகழ்ச்சிநிரலில் பார்த்திருந்தாலும் ஒரு சின்ன டவுட்டுனேயிருந்திருந்தேன். தொகுப்பாளர் மைக்கில் வரவேற்க வந்தமர்ந்தார் அவர் தனக்குண்டானயிருக்கையில். கண்டேன் (என்) கடவுளை.

பிறகு கண்டதும் கேட்டதும் ஒரே புகைமூட்டம் எனக்கு(வேறொருப் பதிவில் அது).

ஏதோஒரிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியிது - எது உங்கள் வெற்றியின் (அ) கூட்டுமுயற்சியின் இரகசியம் (தாரகமந்திரமோ?!!!) ?

அவரின் பதில்: (According to him)

“Hope is not a strategy
Luck is not a Factor
Fear is not an option”


அவரைப் பொருத்தவரை...

"நம்பிக்கையென்பது ஒரு யுக்தியில்லை
அதிர்ஷ்டமென்பது ஒரு காரணியில்லை
பயமென்பது ஒரு தேர்வில்லை"


டிஸ்கி: தலைப்பிலுள்ள close similarity-க்காக சாரு மன்னிப்பாராக.

4 comments:

  1. // "நம்பிக்கையென்பது ஒரு யுக்தியில்லை
    அதிர்ஷ்டமென்பது ஒரு காரணியில்லை
    பயமென்பது ஒரு தேர்வில்லை" //

    சரியாக பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள்...

    உழைப்புதான் சரியானது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

    இந்த இடுகைக்காக நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  2. நன்றி இராகவன் சார்,

    உழைப்பும் பொறுமையும். அவர் "அவதாரில்" பயன்படுத்திய டெக்னாலஜிக்காக பத்து வருடங்களுக்குமேல் காத்திருந்த்தாராம்; அவரே கூறியது அந்நிகழ்ச்சியில்.

    ReplyDelete
  3. மிக அழகான வார்த்தை தேர்வு, மனதில் பதியும் வரிகள் ...சொற்களின் அர்த்தம் மாறாமல், அவற்றை கருத்தாழத்துடன் வழங்கியமைக்கு நன்றி....

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும், தொடர்ந்த பின்னூட்டத்திற்கும் நன்றிகள். அங்கேயெல்லாம் அப்படித்தான் பொதுமக்கள் ஊர்திகள் அரிது சில ஸ்டேட்ஸ்களை தவிர. If you don't have a car, then you are like disabled. அதனாலும் நன்மைகளும் உள்ளனவே, தாங்களை ப்ளாக்கர் ஆக்கியமாதிரி.

    ReplyDelete