Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Saturday, April 10, 2010

குடும்பத்துடன் பையா.

நேற்று இரவுதான் பிவியாரில் பார்த்தேன் என் குடும்பத்துடன்.

என் மூன்றரை வயது மகன் ஏறத்தாழ கார்த்தியின் ரசிகனாயிருந்தான் அவரின் முந்தைய படங்களைப் பார்த்து. "போரம்ல" "வர்ரம்ல" என்றே "ம்ல" பதிலளிப்பான் எதற்கும். இதனால் என் தங்கமணியிடமிருந்து நமக்குதான் அர்ச்சணை "ஒரு சிட்டி பாய் மாதிரியா பேசரான் இவன்... எல்லாம் உங்களால்தான்"... இத்யாதி... இத்யாதி. சரி, முள்ள முள்ளாலே எடுப்போம்னுதான் டிக்கெட் புக்கிட்டேன்.

வழியில் காரிலயே தூங்கியவனை தாஜாசெய்து எழுப்பி மடியில் உட்காரவைத்தேன். தியெட்டரில் படம் தொடங்கியது. ஏனோ முதல் சில காட்சிகள் ஒரு டிவி சீரியல் உணர்வைக் கொடுத்தன... கார்த்தியின் மேக்கப்போ (அ) காமிரா ஆங்கிலோ (அ) கட்சியமைப்போ ஏதோவொன்று.

தமன்னாவை பார்க்குமுன்னரே கார்த்தி வெறித்துதான் பார்த்துக்கொண்டிருந்ததால், பார்த்தப்பின் வரும் 'வெறித்த' பார்வையில் காதலின் கிளம்பல் தெரியவில்லை அவ்வளவாக. அந்த மொட்டநண்பரின் கார்தானிருக்கே பின்னயேன் பஸ்ஸில் அறிமுகம். சரிதான் லிங்குக்கே தோனியிருக்கும் சில காட்சியிலாவது காரை விட்டுவைப்போம்னு.

கேபிளார் விமர்சித்தமாதிரி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதே வெட்டவெளி சண்ட, புழுதிப்பறக்க காட்சியமைத்திருக்கிறார்கள். 'காமடிபீஸ்' வில்லன்கள் கோழியின் காலை உடைக்கிறார்களே தவிர ஹீரோவை ஒன்றும் செய்யக்காணோம்; அவர்கள்தான் உடைப்படுகிறார்கள். மிலிந்த்திர்க்கு அடியாட்கள் பஞ்சம்போல (!) ப்ளம்பர்களை (நன்றி: தண்டோரா)கூட்டிவந்தால் இப்படித்தானாகும், பாவம். அவர்களை முதலில் காண்பிக்கும்போதே, மடியில் என் மகனிடமிருந்து ஒரு காமண்ட் "வில்லன் வந்துட்டான்டா". மறுபடியும் கேபிளாரை நினைத்துக்கொண்டேன்.

'ரன்'னில் மாதவன் சுரங்கப்பாதையில் உள்ளோடி ஷெட்டரை இறக்கி வில்லன்களை எதிர்க்கொள்வார். இதில் கார்த்தி வெட்டவெளியிலோட்டி காரைத்திருப்பி எதிர்கொள்கிறார். அதில் மீராஜாஸ்மினுக்கு அண்ணனால் முகயிறுக்கம். இதில் தமன்னாவிற்கு சித்தியால். பேட்டர்ன மாத்துங்கய்யா மாத்துங்க.

படம் முடிந்தவுடன் என் மனைவியின் பக்கம் திரும்பயெத்தனிக்கையில் அவர்களின் மடியிலிருந்து (இடையில் மாறியிருந்தான்) பாய்ந்துவந்து விட்டான் ஒரு குத்து என் செல்வமகன், புருவங்களை நெரித்திக்கொண்டு. ஆகா... இது வேறயா. இப்போது இரண்டு முட்கள்.

பிகு:
1. வில்லன்கள் நிறைய முடியுடன் படம் முழுவதும் சுற்றிவந்தார்கள். "cast"ல் முதல் பெயர் பொன்"முடி" .
2. மனைவியின் கருத்து - பரவாயில்ல. மகளின் கருத்து - சூர்யா தம்பின்னு proof பண்ணிட்டான்.

11 comments:

  1. // படம் முடிந்தவுடன் என் மனைவியின் பக்கம் திரும்பயெத்தனிக்கையில் அவர்களின் மடியிலிருந்து (இடையில் மாறியிருந்தான்) பாய்ந்துவந்து விட்டான் ஒரு குத்து என் செல்வமகன், புருவத்தை நெருத்திக்கொண்டு. ஆகா... இது வேறயா. இப்போது இரண்டு முட்கள்.//

    ஆஹா... பையா பார்த்த பின் பையன் டெரர் ஆயிட்டார் போலிருக்கு

    ReplyDelete
  2. // வழியில் காரிலயே தூங்கியவனை தாஜாசெய்து எழுப்பி மடியில் உட்காரவைத்தேன். //

    அது சரி பின்னால அடிவாங்க வேண்டும் என விதி இருக்கும் போது யாரால மாத்த முடியும்.... :-)

    ReplyDelete
  3. நன்றி இராகவன் சார்,
    அதே... அதே... நிஜமாவே நல்ல அடி.

    ReplyDelete
  4. நைஸ்.. யுவா..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  5. நன்றி டைரக்டர்,

    நீங்களெல்லாம்தான் ஒரு inspiration எனக்கு.Thanks again for paying the visit.

    ReplyDelete
  6. நேற்ரு நானும் தெரியாத்தனமாப் போயிட்டேன் சத்யம் தியேட்டருக்கு. பாட்டுகளும்,ஒளிப்பதிவும் அருமை. என்ன ஒரு ‘Complan Nutri Bowl'ன்னு ஒரு டப்பா குடுத்தாங்கெ! 120ரூ டிக்கெட்...140ரூ க்கு காம்ப்ளான் கிடைசிருச்சி. கூட்டிக் கழிச்சுப் பாத்தால் கணக்கு சரியாயிருச்சு! நன்றி....நிறைய உங்கள் அனுபவங்கள், பார்த்த அயல் சினிமாக்கள் பற்றி அறிமுகப்படுத்துங்கள் நண்பரே!!

    ReplyDelete
  7. அடடா... காம்ப்ளான் போச்சே.
    நன்றி மயில்ராவணன் சார்...இந்தமாதிரியான உற்சாகப்படுத்தல் எவரையும் எழுதத்தூண்டும்.

    ReplyDelete
  8. //வில்லன்கள் நிறைய முடியுடன் படம் முழுவதும் சுற்றிவந்தார்கள்//
    Hero மட்டும் என்னவாம் கொஞ்சம் முடியுடன் வில்லன்களுக்கு முன்னடி போகிறார். ஒரு குடை மட்டும் வைத்துகொண்டு escape ஆகிரறாமாம்.நல்லா ரூம் போட்டு யோசிகிராங்கயா.

    ReplyDelete
  9. நன்றி பாலா,
    அந்த விஷுவல் ஷாட்லாம் நல்லாதானிருக்கு. ஆனால்... எனக்கென்னமோ காமிராவை ஆன்-பண்ணிட்டு அப்புறம் யோசிச்சமாதிரில்லருக்கு.

    ReplyDelete
  10. ஹிஹிஹி.. நானும் பார்த்து நொந்தேன்

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி கார்க்கி. பதிவுகளைப் பற்றி ஏதாவுது நிறைகுறைகள்?

    ReplyDelete