Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Tuesday, November 23, 2010

ஒரு திட்டமிட்டச் சதி!

இது ஒரு திட்டமிட்டச் சதி. இதன் வலைப்பின்னல் பயங்கரமானது.

எந்தவொரு உலகக் குழுக்களின், இனங்களின், நாடுகளின் மற்றும் அமைப்புகளின் பயங்கரவாத ஆயுதங்களுக்கு கீழானதில்லை அது. அதைகளிடலாம் விடக் கொடுமையானது. நம்முள் ஊடுருவி இரத்தத்தினுள் இரண்டற கலந்து டின்ஏ-க்களை வசமாக்கி நம் வம்சங்களினூடே நகர்ந்து நாசமாக்கக்கூடியது.அதில் தாக்குதலுக்கு உள்ளாவதும், தாக்குபவரும் ஒன்றே.

இதனழகே அதன் செயல்திட்டம் தான். சகஜமாக்கு!!!

கேள்விப்பட வை!
பார்க்க வை!
பதட்டத்தைத் தணி!
அதனிடையே வளர வை!
பங்கேற்க வை!
சுகப்பட வை!
கேட்க வை!
கட்டளையாக்கு!
அழி.

ஒரு அணுஆயுதமோ, ஒரு உயிர்க்கொல்லும் கிருமியோ அல்லது விடமோ செய்ய முடியாத ஒன்று. ஒரு சமூகத்தை அதன் தலைமுறைகளுக்குள் ஊர்ந்துக் கொல்வது. ஜீன் சரிப்படுத்தலுக்கு அகப்படாதது. கையறு நிலையில் நிறுத்துவது.

அன்பளிப்பு - கையூட்டு - லஞ்சம்.

நான் நன்றாக தயார்செய்யப்பட்டுவிட்டேன். இருந்தும் போராடுகிறேன்...

ஒரு இடைத்தரகருடனும் - கொடுப்பதில்லை... எனக்கு தகுதியான பள்ளியில்/கல்லூரியில் படிப்பு!

ஒரு அலுவலருடனும் - இல்லை... வேலை என் தகுதிக்குத்தான்!

ஒரு ட்ராபிக் போலீசுடனும் - கொடுத்துப் பழக்கமில்லை... கொடுத்து அசிங்கப் பட வைப்பதில்லை... சார்ஜ் சீட்டைக் கொடுங்கள்!

ஒரு காவலருடனும் - எனக்கு எல்லா வகையிலும் பாத்திரமான நிலத்தில் ஆக்கிரமைப்பு...கொடுப்பதில்லை... கோர்ட்டில் வழக்கு!

இருந்தும் இழந்துக் கொண்டிருக்கிறேன். கவனிப்பு மங்குகின்றன. எதிர்ப்பின் வீரியம் குறைகிறது... வயது ஏற ஏற! அனுபவம் கூடக்கூட!!

காப்பாற்றுங்கள்!!!

நானும் படிக்கிறேன்!

சென்ற வாரத்தில் "பெங்களூர் புத்தக விழா"வில் சிலபலப் புத்தகங்களை உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, மற்றும் பெயர் ஞாபகத்தில் வராத (இதை எழுதும்போது... ஹிஹி) பதிப்பக ஸ்டால்களில் வாங்கினேன்.

அவைகளில் படித்து முடித்தவை - சிலரில் ஒருவனாகப் பிறந்து பலரை வென்று ஆண்டவனின் வரலாறு ஒன்று, தனது கூர்ந்த அவதானிப்பால் மட்டுமே பெட்ரோல் போடுபவன் நிலையிலிருந்து பெட்ரோல் தோண்டியவன் என்ற நிலைக்கு உயர்ந்தவனின் வாழ்க்கைப் பயணமொன்று, பிறகு எங்கிருந்தோ வந்தவனால் காக்கப்பட்டு, அவனின் வழித்தோன்றல்களால் அனுபவிக்க, வளர்க்கப்பட்டு இன்றொரு அரண்மனையாக மட்டுமே நின்றுருக்கின்ற ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை ஒன்று.

விமர்சனங்கள் என்றில்லாமல் படித்தவைகளைப் பற்றி என் எண்ணங்களைப் பகிர ஆசை. வரும் நாட்களில் பார்ப்போம்...

Friday, July 30, 2010

கோபக்கழிவு.

படித்தேன்
பல புத்தகங்களை
பழகினேன்
சில த்யானங்களை
புரிந்தேன்
பல மனிதங்களை
பற்றினேன்
சில தெய்வங்களை
இருந்தும் பல் கடித்து
வெளிப்படும் சீற்றலாய்
என் உள்மிருகம்.

Friday, April 23, 2010

அய்யயோ லீவு விட்டாச்சு

குடும்பத்தோடு தானிருக்கிறேன்.
குப்பை நிறைஞ்சிருக்கு.
வீடு பெருக்க நேரம் வந்தாச்சு.


அவள் விட்டெரிந்த முடிச்சுருள்
மகள் நிராகரித்த க்ளிப்புகள்
எல்லாம் அப்படி அப்படியே இருக்கு,

வீடு பெருக்க நேரம் வந்தாச்சு.
அய்யயோ வார லீவு விட்டாச்சு..


- கவிஞர் மெ.பாலா

இவர் என் ஆத்மநண்பர். தற்போது ஜப்பானில் ஒரு கம்பனியில் குப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறார் (வீட்டிலும் அதேதான் செய்கிறார் என்பதை மேற்கண்ட 'எதிர்கவுஜை' மூலம் அறியக்கண்டேன்).

பிகு:இது அவர் எனக்கு ஈ-மெயிலிட்டது.

Wednesday, April 21, 2010

"லீவு விட்டாச்சு"

வீடு பெருக்க ஒப்பவில்லை
தனியாகத்தானிருக்கிறேன்
அதனால் குப்பையில்லை.

தினங்கள் நான்காயிற்று
வீடு பெருக்க ஒப்பவில்லை
தூசியில்லாமலில்லை.

புறப்படுகையில்
அவள் விட்டெரிந்த முடிச்சுருள்
மகள் நிராகரித்த க்ளிப்புகள்
மகன் கலைத்திட்ட பொம்மைகள்
வீடு பெருக்க ஒப்பவில்லை.

Sunday, April 11, 2010

கண்டேன் (என்) கடவுளை.

போன ஜனவரி மாதயிறுதியில் இறங்கினேன் கலிஃபோர்னியாவில்(CA). லாஸெஞ்சலஸ்(LAX) விமானநிலையம். பல ஹாலிவுட் ஜாம்பவான்கள் கால் பதித்தயிடமானாலும் நான் யாரையும் பார்க்கவில்லை அன்று. பனிபொழிவில்லை, குளிரிருந்தது. ஏற்கனவே கூகிலாண்டவரிடம் வரம் வாங்கியவாறு 'புளூ' காப்ஸில் ஏறியமர்ந்தேன். அந்த கருப்பு அமெரிக்கரின் ஸ்லாங்கில் நம்பிக்கையில்லாமில்லை, ஆனலும் பிரிண்டவுட் காமித்து சேரவேண்டிய இடத்தை அவரிடம் உறுதிசெய்தப்பின்னரே பெல்டையணிந்து தளர்ந்தேன் சீட்டில்.

அடைந்தயிடம் ஹயட் ஹோட்டல், அனஹெம்(Anaheim). ஒருநாள் ஓய்வு-ற்குப்பின் நான் வந்த வேலையை கவனித்தேன். வேறொன்றுமில்லை ஒரு டெக்னிக்கல் கான்ஃபிரன்ஸ் ;அலுவலக சம்பத்தபட்ட சிலபல வேலைகளை முடித்தேன் முதல் இருநாட்களில். மூன்றாவது நாளில் அம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி; சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் காமரூன் (Jamesh Cameron). வாவ்... என் கனவுக்கடவுள் (அ) கனவின் கடவுள்.

நிகழ்ச்சிநிரலில் பார்த்திருந்தாலும் ஒரு சின்ன டவுட்டுனேயிருந்திருந்தேன். தொகுப்பாளர் மைக்கில் வரவேற்க வந்தமர்ந்தார் அவர் தனக்குண்டானயிருக்கையில். கண்டேன் (என்) கடவுளை.

பிறகு கண்டதும் கேட்டதும் ஒரே புகைமூட்டம் எனக்கு(வேறொருப் பதிவில் அது).

ஏதோஒரிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியிது - எது உங்கள் வெற்றியின் (அ) கூட்டுமுயற்சியின் இரகசியம் (தாரகமந்திரமோ?!!!) ?

அவரின் பதில்: (According to him)

“Hope is not a strategy
Luck is not a Factor
Fear is not an option”


அவரைப் பொருத்தவரை...

"நம்பிக்கையென்பது ஒரு யுக்தியில்லை
அதிர்ஷ்டமென்பது ஒரு காரணியில்லை
பயமென்பது ஒரு தேர்வில்லை"


டிஸ்கி: தலைப்பிலுள்ள close similarity-க்காக சாரு மன்னிப்பாராக.

Saturday, April 10, 2010

குடும்பத்துடன் பையா.

நேற்று இரவுதான் பிவியாரில் பார்த்தேன் என் குடும்பத்துடன்.

என் மூன்றரை வயது மகன் ஏறத்தாழ கார்த்தியின் ரசிகனாயிருந்தான் அவரின் முந்தைய படங்களைப் பார்த்து. "போரம்ல" "வர்ரம்ல" என்றே "ம்ல" பதிலளிப்பான் எதற்கும். இதனால் என் தங்கமணியிடமிருந்து நமக்குதான் அர்ச்சணை "ஒரு சிட்டி பாய் மாதிரியா பேசரான் இவன்... எல்லாம் உங்களால்தான்"... இத்யாதி... இத்யாதி. சரி, முள்ள முள்ளாலே எடுப்போம்னுதான் டிக்கெட் புக்கிட்டேன்.

வழியில் காரிலயே தூங்கியவனை தாஜாசெய்து எழுப்பி மடியில் உட்காரவைத்தேன். தியெட்டரில் படம் தொடங்கியது. ஏனோ முதல் சில காட்சிகள் ஒரு டிவி சீரியல் உணர்வைக் கொடுத்தன... கார்த்தியின் மேக்கப்போ (அ) காமிரா ஆங்கிலோ (அ) கட்சியமைப்போ ஏதோவொன்று.

தமன்னாவை பார்க்குமுன்னரே கார்த்தி வெறித்துதான் பார்த்துக்கொண்டிருந்ததால், பார்த்தப்பின் வரும் 'வெறித்த' பார்வையில் காதலின் கிளம்பல் தெரியவில்லை அவ்வளவாக. அந்த மொட்டநண்பரின் கார்தானிருக்கே பின்னயேன் பஸ்ஸில் அறிமுகம். சரிதான் லிங்குக்கே தோனியிருக்கும் சில காட்சியிலாவது காரை விட்டுவைப்போம்னு.

கேபிளார் விமர்சித்தமாதிரி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதே வெட்டவெளி சண்ட, புழுதிப்பறக்க காட்சியமைத்திருக்கிறார்கள். 'காமடிபீஸ்' வில்லன்கள் கோழியின் காலை உடைக்கிறார்களே தவிர ஹீரோவை ஒன்றும் செய்யக்காணோம்; அவர்கள்தான் உடைப்படுகிறார்கள். மிலிந்த்திர்க்கு அடியாட்கள் பஞ்சம்போல (!) ப்ளம்பர்களை (நன்றி: தண்டோரா)கூட்டிவந்தால் இப்படித்தானாகும், பாவம். அவர்களை முதலில் காண்பிக்கும்போதே, மடியில் என் மகனிடமிருந்து ஒரு காமண்ட் "வில்லன் வந்துட்டான்டா". மறுபடியும் கேபிளாரை நினைத்துக்கொண்டேன்.

'ரன்'னில் மாதவன் சுரங்கப்பாதையில் உள்ளோடி ஷெட்டரை இறக்கி வில்லன்களை எதிர்க்கொள்வார். இதில் கார்த்தி வெட்டவெளியிலோட்டி காரைத்திருப்பி எதிர்கொள்கிறார். அதில் மீராஜாஸ்மினுக்கு அண்ணனால் முகயிறுக்கம். இதில் தமன்னாவிற்கு சித்தியால். பேட்டர்ன மாத்துங்கய்யா மாத்துங்க.

படம் முடிந்தவுடன் என் மனைவியின் பக்கம் திரும்பயெத்தனிக்கையில் அவர்களின் மடியிலிருந்து (இடையில் மாறியிருந்தான்) பாய்ந்துவந்து விட்டான் ஒரு குத்து என் செல்வமகன், புருவங்களை நெரித்திக்கொண்டு. ஆகா... இது வேறயா. இப்போது இரண்டு முட்கள்.

பிகு:
1. வில்லன்கள் நிறைய முடியுடன் படம் முழுவதும் சுற்றிவந்தார்கள். "cast"ல் முதல் பெயர் பொன்"முடி" .
2. மனைவியின் கருத்து - பரவாயில்ல. மகளின் கருத்து - சூர்யா தம்பின்னு proof பண்ணிட்டான்.

Thursday, April 8, 2010

முத்துராமனுக்கு உதவி தேவை

முத்துராமன் - கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் என்னைப்போல் (நன்றி- http://idlyvadai.blogspot.com/ )இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

Monday, April 5, 2010

ரூட் மேப் 2

எழுதிப்பார்க்கிறேன்னு மனசிலயே எழுதியெழிதித் துடைத்திருந்தேன். இதோ தொடர்ந்துவிட்டேன் மேகத்தில் (clouds).

உயிர்மையில் சென்றமர்ந்து கட்டுரைகளின் தலைப்பை மேய்ந்ததில் அயர்ந்தன என் மூளைகள் (பெரு, சிறு இரண்டும்). சிறு திருத்தம்... முதலில் அசந்தன பிறகுதான் அயர்ந்தன. என் பள்ளிவயது முழுவதும் "பூந்தளிர்","அம்புலிமாமா", "ராணி, லயன், முத்து மற்றும் க்ளாஸிக் காமிக்ஸ்கள்", மேலும் அன்றைய மேல்வீட்டு அக்காவின் மொழிபெயர்ப்பின் தயவால் ஆங்கில "அமர்" காமிக்ஸ் - போன்றவைகளே (விடுபட்ட காமிக்ஸ்கள் மன்னிக்கவும்) நான் படிப்பதற்கு அகப்பட்டவையாகவும், தோதாகவும் (நம்ம லெவலுக்கு) இருந்தன.

பின் பள்ளிவகுப்பின் எண்ணிக்கை கூடக்கூட (7,8,9.. +1, +2 என்று), பிகேபி, சுபா, இராஜேஷ்குமார்... இவர்களின் நாவல்நாயகர்களான பரத், நரேந்திரன், மற்றும் விவேக் உள்ளிட்டோர் என் உள்ளத்தையும் சமயத்தில் உடலையும் (வீரம் பொங்குமில்ல) க்ரைம், உங்கள் ஜூனியர் மூலம் கொள்ளைக் கொண்டனர். நடுநடுவே புஷ்பா த.துரை, லஷ்மி, சாண்டில்யன்... லைப்ரரிகளின் (அரசு, தனியார்) உதவியால் சங்கர்லாலுடனும், கணேஷ்-வசந்த்-துடனும் துப்பரிந்துக்கொண்டிருந்தேன்.அசோகன் (பாக்கெட் நாவல்) சுஜாதாவை மாதநாவலுக்கு இறக்கியதாக (import என்றுக்கொள்ளவும்) ஒரு நினைவு. அதனால் நம்ம வாத்தியாரையும் ரூபாய் பத்துக்கோ பதினைந்துக்கோ வாசிக்கமுடிந்தது.

இவைகளை சேகரிக்க சில பெட்டிக்கடைகளையும் பல பழையப்புத்தக கடைகளையும் பள்ளி விட்டதும் முற்றுகையிட்டு நாலணா, ஐம்பது காசிலிருந்து ஐந்து, பத்து ரூபாக்கள்வரை செலவிடுவேன் நாள்தோரும். என் கணிசமான(!) பாக்கெட்மணியின் கணிசமான(!) தொகையை அவ்வாறே கொடுத்து என் இப்போதைய பாரலல் (parallel), லாடரல் (lateral) திங்கிங்கிற்கான விதையை விதைத்தேன். ஆம்... காமிக்ஸ்களும் நாவல்களும் என் சிந்தனை-கற்பனை திறன்களைத் தூண்டின என்றே சொல்வேன்.

பின்னர் +2 முடிந்து காலேஜ் செல்லும்தருவாயில் பாலகுமாரன் ஒரு நண்பர் வழியாக அறிமுகமாகி என்னையாட்க்கொண்டார்.

தொடர்வேன்...

Thursday, April 1, 2010

மரங்களை வெட்டாதீங்கப்பா.



நாளைக்கு இத விட்டுவைச்சிறுப்பானுங்களா?

பகிர்வு.

நல்ல தொடக்கம் இது. என்னுடைய வாசகர்களுக்கு (என்னாது...! யாருக்கு டீ-யாத்திறேனா...) பரிந்துரைக்கிறேன்.

http://tamilbloggersforum.blogspot.com/