Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Tuesday, November 23, 2010

ஒரு திட்டமிட்டச் சதி!

இது ஒரு திட்டமிட்டச் சதி. இதன் வலைப்பின்னல் பயங்கரமானது.

எந்தவொரு உலகக் குழுக்களின், இனங்களின், நாடுகளின் மற்றும் அமைப்புகளின் பயங்கரவாத ஆயுதங்களுக்கு கீழானதில்லை அது. அதைகளிடலாம் விடக் கொடுமையானது. நம்முள் ஊடுருவி இரத்தத்தினுள் இரண்டற கலந்து டின்ஏ-க்களை வசமாக்கி நம் வம்சங்களினூடே நகர்ந்து நாசமாக்கக்கூடியது.அதில் தாக்குதலுக்கு உள்ளாவதும், தாக்குபவரும் ஒன்றே.

இதனழகே அதன் செயல்திட்டம் தான். சகஜமாக்கு!!!

கேள்விப்பட வை!
பார்க்க வை!
பதட்டத்தைத் தணி!
அதனிடையே வளர வை!
பங்கேற்க வை!
சுகப்பட வை!
கேட்க வை!
கட்டளையாக்கு!
அழி.

ஒரு அணுஆயுதமோ, ஒரு உயிர்க்கொல்லும் கிருமியோ அல்லது விடமோ செய்ய முடியாத ஒன்று. ஒரு சமூகத்தை அதன் தலைமுறைகளுக்குள் ஊர்ந்துக் கொல்வது. ஜீன் சரிப்படுத்தலுக்கு அகப்படாதது. கையறு நிலையில் நிறுத்துவது.

அன்பளிப்பு - கையூட்டு - லஞ்சம்.

நான் நன்றாக தயார்செய்யப்பட்டுவிட்டேன். இருந்தும் போராடுகிறேன்...

ஒரு இடைத்தரகருடனும் - கொடுப்பதில்லை... எனக்கு தகுதியான பள்ளியில்/கல்லூரியில் படிப்பு!

ஒரு அலுவலருடனும் - இல்லை... வேலை என் தகுதிக்குத்தான்!

ஒரு ட்ராபிக் போலீசுடனும் - கொடுத்துப் பழக்கமில்லை... கொடுத்து அசிங்கப் பட வைப்பதில்லை... சார்ஜ் சீட்டைக் கொடுங்கள்!

ஒரு காவலருடனும் - எனக்கு எல்லா வகையிலும் பாத்திரமான நிலத்தில் ஆக்கிரமைப்பு...கொடுப்பதில்லை... கோர்ட்டில் வழக்கு!

இருந்தும் இழந்துக் கொண்டிருக்கிறேன். கவனிப்பு மங்குகின்றன. எதிர்ப்பின் வீரியம் குறைகிறது... வயது ஏற ஏற! அனுபவம் கூடக்கூட!!

காப்பாற்றுங்கள்!!!

6 comments:

  1. உங்களைப்போல இன்னும் பலர் வருவார்கள்; நம்பிக்கை தளராதிருங்கள்!

    ReplyDelete
  2. நல்லாத்தானே இருந்தீங்க :) ( ஜோக்ஸ் அபார்ட்- நல்ல
    காரம்,நல்ல எண்ணங்கள்)

    ReplyDelete
  3. இப்படி எல்லாம் இருக்க ஆசைதான்..

    //காப்பாற்றுங்கள்!!!

    பிழைக்க வழி இல்லை.. நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும்..

    ReplyDelete
  4. நன்றி சேட்டைக்காரன்,

    வர வேண்டும். இது பொதுபுத்தியில் சகஜம் என பதியாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. வாங்க மரா,

    தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் உங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  6. நன்றி பிரியமுடன் ரமேஷ்,

    எனது பயமே அதுதான்... மாறிக்கொண்டிருக்கிரமோ ?!!!

    ReplyDelete