Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Friday, August 9, 2013

சமைத்ததை சொல்வேன்!

வெளியே திரும்பிப்பார்த்தேன்... கான்ராஸ்டை குறைத்தமாதிரி கருமை படர்ந்து தூறிக்கொண்டிருந்தது. சிகாகோவின் சம்மர் ஷவர். மணியைப்பார்த்தேன் மாலை 5.40. பசித்தது... எதைக்கொறிக்கலாம் என்று யோசித்து, அந்த முடிவையெடுத்தேன் சமைக்கலாமென்று.

விமானத்தின் வயிற்றில் சுமந்து, கஸ்டம் ஃபாரமில் "நோ ஃபுட்" என டிக்கடித்து எடுத்துவந்த பெட்டியில், எம்டியாரின் ரெடிடு ஈட்டுகளும், மற்றும் மாகி நூடுல்சும் இருந்தது. இதுவெல்லாம் "சமைத்த" கணக்கில் வராது என்பதால் (பின்னர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும்போது), குளிர்சாதனப்பெட்டியிலிருந்த சிக்கன் டமாரக்குச்சியை எடுத்து கொஞ்சம்போல் சுடுநீர் ஊற்றி,  வெளியே வைத்தேன் வெப்பம் சமநிலையையடைய. பிறகு நான் செய்த அய்ட்டத்தை செய்முறை விளக்க படங்களுடன் கீழே உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன். 

பார்வைக்கு கொடுத்துள்ளதை முயற்சி செய்துப் பார்ப்பது அவரவர் உள்ளத்துணிவும் உடல்நலத்தையும் பொருத்தது. அதற்கு கம்பனி பொறுப்பல்ல!

முதல் அடி: இவையெல்லாம் தேவையான பொருட்கள்... தேவையான அளவா? அதான் படத்திலுள்ளதே.


முதல் அடி: தொடர்கிறது... 


அந்த மஞ்சள் குப்பியிலுள்ளது தூய எலுமிச்சைச் சாறு.

முதல் அடி: தொடர்கிறது...  இதான் கடைசி.


எப்போதும் சைட்டிஷ் வரும் பதத்தை பொருத்துதான் மெய்ன்டிஷ் சாதமா? சப்பாத்தியா? அல்லது மேற்சொன்ன பெட்டியிருந்து ஏதாவுது ஒன்றா என்று முடிவெடுப்பேன். ஆனால் இன்று... மிக (வும்) நம்பிக்கையுடன் இந்த அழகில் சப்பாத்தி மாவை பிசைந்து வைத்தேன்.

இரண்டாம் அடி: தவாவில்... இப்படி வத(தை)த்துக்கொ(ல்லு)ள்ளுங்கள். 


ஆமாம்பா... அதற்கு முன்னாடி ஸ்டவ்வை பற்றவைக்கவேண்டும். சற்றெவேனும் சமைக்க தெரிந்தவரை பக்கத்தில் நிருத்திக்கொள்ளுங்களப்பா... தொணதொணக்காமல்.

மூன்றாம் அடி: தக்காளியை அரைத்து அதில் சேருங்கள்.


எதற்கு அப்படி அரைத்து சேர்ப்பதென்றால்... அய்... பக்கத்திலுள்ளவரைக் கேளுங்கள்.

நான்காம் அடி... ஒரு நிமிடம். 


நான் ஆரம்பித்திலே சிலபல தேவையான பொருட்களை சேர்த்து ஊற வைத்த சிக்கன், முப்பது நிமிடம் கழிந்து இப்படித்தான் இருந்தது. இருக்கனும்.

நான்காம் அடி: மூன்றாம் அடியை முடித்து இன்னும் சற்று வதக்கி, பிறகு மேலுள்ள மாரினேட்டட் சிக்கனை போடுங்கள்.


போட்டு, கீழ்காணும் நிமிட அளவில் மூடியைபோட்டு கொதிக்க விடுங்கள்.


அய்(?)ந்தாம் அடி: அவ்வப்போது கிளறி விடுங்கள்.இடையே...


மிச்சமீதி பொருட்களை எங்கெங்கு வைக்கவேண்டுமோ அங்கெங்கே வைத்துவிடுங்கள் பிறகு தேவைப்படுமல்லவா...


இதுவெல்லாம் குப்பைக்கு. முடிந்தால் பச்சை சிவப்பென்று பிரித்து.

ஆறாம் அடி:  ரகசியமாக கொத்தமல்லி தழையை தூவி ஓரிரண்டு நிமிடங்கள் கழித்து....


எதற்கு ரகசியமாக என்று பக்கதிலுள்ளவரை கேட்பீர்கள்தானே. நோ யூஸ்... நானே சொல்கிறேன்... அது வேறொன்றுமில்லை... "தேவையான பொருட்கள்" படங்களில் அது இல்லை. அப்ப அதுதான் நம்ம சீக்ரெட் இன்கிரிடியன்ட்.

ஏழாம் அடி என்று இனி அடியெல்லாம் இல்லை வெட்டுதான்... இப்படி ச்ர்வ் செய்து.


வாட்... சப்பாத்தி எண்ணெயில்லாமல்... சூப்பராயிருக்கா?!!! ம்ஹும் அதன் செய்முறை மட்டும் வேண்டாம். அதற்கு இன்னும் மனைவியிடமிருந்து காப்பிரைட் வாங்கவில்லை.

சும்மா சொல்லக்கூடாது... செமயா... சுகுரா... இருந்தது. அதே டேஸ்ட் வரணும்னா இன்னோரு சீக்ரெட் இன்கிரிடியன்ட் வேணும்.

 அதான்பா... 

சமைக்க நான்.

8 comments:

 1. தனிமையில் இருக்கும் ஒருவன் எப்படி எல்லாம் டைம் பாஸ் செய்கின்றான் என்பதற்கு உதாரணம் இது...

  ReplyDelete
 2. ககக போங்கள் ஜாக்கி! நன்றி!!

  ReplyDelete
 3. நன்றி பட்டிகாட்டான்... குறையிருப்பின் சுட்டிகாட்டுங்கள்...

  ReplyDelete
 4. பார்க்க நன்றாக இருக்கிறது யுவா.
  கின்னி பிக் யாராவது இருக்காங்களா?
  -பாலா

  ReplyDelete
 5. நன்றி பாலா.... யாருங்க அது?

  ReplyDelete
 6. பிறந்த மண் மேல இருக்கிற பாசமும், நம்ம சமைச்ச சாப்பாடு சூப்பர் டேஸ்டா இருக்கிறதும், ரெண்டுமே அதுவா நடக்கிற விஷயங்கள்....

  ReplyDelete
 7. அப்டின்றிங்க... சரியாதான் இருக்கும்... வருகைக்கு நன்றி... சத்யா!

  ReplyDelete