Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Thursday, February 24, 2011

வகை-தொகை:23 / 02 /11

தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகப்பட்சம் ரூ.16 லட்சங்கள் செலவு செய்யலாம்........ - செய்தி.

என்ன எழவுடா இது?... எதற்காக செலவு அவர் செய்யவேண்டும். மக்களால் தேர்ந்தடுக்கப்படும் பிரதிநிதி தானே அவர். இதில் நிதி எங்கே அவசியமாயிற்று? தன்னை விளம்பரம் செய்யவா? அப்படி செலவு (சொந்த காசுப் போட்டோ, கட்சிக் காசோ) செய்து தன்னை தேர்ந்தெடுப்பட வைத்தால், முதலில், போட்ட முதலை எடுப்பாரா? அல்லது தொகுதி மக்களுக்கு சேவை செய்வாரா? என்னதான் நேர்மையானவராக இருந்தாலும் போட்டதை எடுத்திட்டு பண்ணுவோமே என்று ஆரம்பித்து ஊழலில் பிஹெஜ்டி வாங்கிவிட்டுதான் ஓய்வார்.

மக்களின் பங்களிப்பு அவசியம் இங்கே. தேர்தல் துறை, தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பட்டியலை, அம்மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதி சரிபார்க்கப்பட்ட அவ்வேட்பாளர்களுக்கு ஒரு கணக்கை ஆரம்பித்து, அதில் மக்களின் நிதிப்பங்களிப்பை சேர்க்க செய்யவேண்டும் (இது கட்சிகள் செய்யும் உண்டியல் குலுக்கல்களுக்கு மாற்று தான்). அதிலிருந்தே அவர்கள் செலவுச் செய்து தேர்தலை சந்திக்கவேண்டும். வேண்டுமானால் குறைந்தபட்ச தொகையாக வேட்பாளரின் பங்களிப்பு இருக்கலாம். இதனால் மக்களின் ஈடுபாடு தேர்தலில் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் பிரதிநிதியை கண்டெடுக்க முனைவார்கள், அவர்களுக்கு உதவிச் சேர்ப்பார்கள், மற்றும் தேர்தல் நாளில் அவர்களின் ஓட்டும் அதிகமாகலாம். இப்போது வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கும் வலைத்தகவல் தொடர்பினால் இது சாத்தியமே. வெளிப்படையான அணுகுமுறை அதிகரிக்கும் இதனால்.
***
வெளிப்படை. இந்த படத்தைப் பாருங்கள். இது ஒரு IAS ஆபிசர் அலுவலக அறையில் cctv -யால் எடுக்கப்பட்டதாம்.


                                இமேஜ்: பெங்களூர் மிர்ரர்.

தவறு. இது ஒன்றும் 'ஸ்டிங் ஆபெரசன்' இல்லை. அந்த அரசு அதிகாரியே தன்அலுவலக அறையில் பொருத்தி, அதனுள்ளேயான நடவடிக்கைகளை உலகுக்கு தெரியப்படுத்துகிறார். இடம்: பெங்களூர் எலெக்ட்ரிசிட்டி போர்டின் எம்டி அறை. அந்த முன்மாதிரி காரியத்தை செய்தவர் ஒரு தமிழர் (இப்படியும் ஒரு தமிழர்). பெயர் திரு. மணிவண்ணன்.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில் வெளிவரும். அதில் அவரின் பிரத்யோகப் பேட்டி இடம்பெற முயர்ச்சிக்றேன். என் ஆத்மா நண்பரின் நண்பர்; பல பின்னனி தகவல்களைத் தெரிவித்துள்ளார்.அதனால் சாத்தியப்படலாம். இப்போதைக்கு இதை கிளிக்குங்கள்.
***

சில நாட்களாகவே இடதுகால் கட்டைவிரலில் வலி. இன்று அது அதிகமாகவே அலுவலக இடையில் கிளம்பி, என் மனைவியை அழைத்துக்கொண்டு அப்பலோ கிளினிக்கு சென்றேன். சரியான இடத்தை ஒரே விரலால் அழுத்தி என்னை அலற வைத்துவிட்ட டாக்டர், வேலைப்பளு கொடுக்கும் மனழுத்ததை காரணித்து யூரியாவில் முடிச்சிட்டார். இரத்தத்தை பரிசோதிக்க சொல்லி அந்த அறைக்கு வழியனுப்பினார். மனைவி என்எதிரே நிற்க, தமிழர் போலிருந்த அந்த நர்ஸ் சிரிஞ்சை ரெடியிட்டார். முகத்தை நிர்மலமாக வைத்து என்மனைவி முகத்தை பார்த்தபடி, சிரஞ்சின் நீடிலை என் கைநரம்பில் உள்வாங்கி அதன் வெற்றிடத்தை சிவப்பினால் நிரப்பினேன். மனைவி சற்று ஆச்சர்யமாக "வலிக்கலையா?" என்றார். "உன் முகத்தை பார்திருந்தேனில்லையா" என்று அந்தப் பந்தை சிக்சருக்கு அனுப்பினேன். அதற்க்கு "அதில்லை, எனக்கு கூட இவர்கள் முன்பு வலிக்காமல்-தான் எடுத்தார்கள், அதை கன்பிர்ம் செய்தேன்" "குட் வொர்க்" என்றார் அந்த நர்சைப் பார்த்து. அவர் "பழக்கம்-தான் மேடம். மூன்று வருட அனுபவம். இருந்தாலும் சார் சொன்னது நல்லா இருந்த்தது. வெளியே இப்படி பேசுறாரே, வீட்டில் என்ன பேசுவார்?! பொறாமையா இருக்கு" ஆச்சர்யப்பட்டார். என் மனைவி "அவர் வெளியில் பேசுவதுதான். வீட்டில் ஒன்றுமில்லை " என்றுக் கூறி எல்லைகோட்டைத் தாண்டி பந்தை உள்ளேதள்ளி அதை கேட்சும் பிடித்தார். கங்குலிக் கனக்காய் என் அதிர்ஷ்டத்தை நொந்தப்படி வீடு திரும்பினேன் ஓய்வெடுக்க.
***
டிவியில் பழைய "மாயாபஜார்". என்டியார் கிச்சுவாக வெளுத்துக்கட்ட, நம்பியார் சகுனியாக நரித்தனம்காட்ட, ஜெமினி அபிமன்யுவாய் துள்ள, ரங்காராவும், சாவித்ரியும் முறையே கடோத்கஜனாகவும், பலராமர் பெண்ணாகவும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுகொண்டிரந்தனர். தங்கவேல் வேறு நடுவில் இரகளையுடன். கூர்மையான மற்றும் எள்ளலான வசனங்கள். அதிலொன்று - 'குதுகுலமாயிருக்கையில் குதர்க்கம் கூடாது' மற்றும் நம்பியாரை அருகில் வைத்துக்கொண்டு என்டியார் சொல்லும் " சகுனி இந்த வீட்டிலிருக்க, அசல் சனி எந்த வீட்டில் இருந்தாலென்ன?' குத்தல். பாடல்கள் "ஆகா இன்ப நிலாவினிலே" வும் "கல்யாண சமையல் சாதமும்" காதலும் நகைச்சுவையாகவும் மனதை வென்றன. மொத்தத்தில் நல்ல ஒய்வு.
***
.

17 comments:

  1. சுவாரஸ்யமான எழுத்து நடை

    ReplyDelete
  2. நல்ல பதிவு....சுவாரசியமான எழுத்து நடை..

    அன்புடன்
    பொன்.சிவா

    ReplyDelete
  3. யோவ் நான் போன்ல சொன்ன சின்ன பையன் நடை கருத்தை வாபஸ் வாங்கிக்குறேன்..
    நல்லா எழுதி இருக்க...

    இந்த பதிவு நல்ல பதிவு இதை திரட்டியில் சேர்த்தால்தான் நிறைய பேர் படிப்பாங்க...போன் செய்யுங்க விபரம் சொல்லறேன்..

    ReplyDelete
  4. நன்றி கலாநேசன்,
    நன்றி பொன்.சிவா,
    நன்றி ஜாக்கி, செல்பேசியில் அழைத்தும் கொடுத்த உற்சாகமூட்டலுக்கும், பட்டி டிப்ஸ்-கும்.

    ReplyDelete
  5. ரசிக்கும்படியான எழுத்து நடை... அதுவும் அந்த நர்ஸ்சிடம் பேசிய இடம் டச்சிடங்...

    கலக்குங்க...

    ReplyDelete
  6. சங்கவி,
    அப்படியா? மேலும் மெருக்கேற்ற முயற்சிக்றேன். ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. யுவா

    நல்ல எழுத்து நடை. கிளினிக் உரையாடல் நன்றாக
    இருந்தது. மேலும் பல பதிவுகள் எதிர்பர்கின்றோம்.

    ReplyDelete
  8. தேர்தல் செலவு ஐடியா நன்றாக உள்ளது.
    நடைமுறைக்கு சத்தியமா?

    ReplyDelete
  9. பாலா, உற்சாகம் பிறக்கிறது... அடுத்த பதிவு தங்களின் மேலான ஆதரவுடன் தானே.

    ReplyDelete
  10. அனானி, வருகைக்கு நன்றி முதலில். சாத்தியப்படும்... தேர்தல் கமிசன் கண்டிப்புடன் செயல்படுத்தினால். சில லுப் ஹோல்கள் இருக்கலாம் - சரிப்படுத்த முடியும்.

    ReplyDelete
  11. அப்புறம், தாங்கள் தான் என் முதல் அனானி.;-)

    ReplyDelete
  12. யுவா நான் உங்களை சொல்லவில்லை. பேரை சொல்லுற அளவுக்கு அவங்க எல்லாம் ஒரத்து இல்ல நீங்க நல்லா தான் எழுதுறீங்க, திரட்டில சேர்த்தால் நிறைய பேரு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  13. நன்றி ♥ RomeO ♥ :

    கூடியவிரைவில் சேர்கிறேன்.

    ReplyDelete
  14. எப்படி எழுதகூடாதுன்னு பார்க்கணும்னா வந்துபாருங்கன்னு சொன்னீங்க. சரின்னு வந்து பார்த்தால்
    என்னை எழுதலாமா வேண்டாமான்னு யோசிக்க வச்சுட்டீங்க.போங்க சார்

    ReplyDelete
  15. நன்றி 'யாரோ கண்மணியான்', வருகைக்கு. இவ்வளவு தான் இது. பாருங்கள், எனக்கு கிடைத்த ஊக்குவிப்பை. எழுதத் தொடங்குங்கள், கமான்...

    ReplyDelete
  16. பதிவுலையும் சிக்சர் அடிச்சிட்டிங்க.. வாழ்த்துக்கள் யுவா!!

    ReplyDelete
  17. நன்றி அருண்,

    பதிவில அடிச்சாதான் உண்டு... :-)

    ReplyDelete