Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Thursday, February 24, 2011

வகை-தொகை:23 / 02 /11

தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகப்பட்சம் ரூ.16 லட்சங்கள் செலவு செய்யலாம்........ - செய்தி.

என்ன எழவுடா இது?... எதற்காக செலவு அவர் செய்யவேண்டும். மக்களால் தேர்ந்தடுக்கப்படும் பிரதிநிதி தானே அவர். இதில் நிதி எங்கே அவசியமாயிற்று? தன்னை விளம்பரம் செய்யவா? அப்படி செலவு (சொந்த காசுப் போட்டோ, கட்சிக் காசோ) செய்து தன்னை தேர்ந்தெடுப்பட வைத்தால், முதலில், போட்ட முதலை எடுப்பாரா? அல்லது தொகுதி மக்களுக்கு சேவை செய்வாரா? என்னதான் நேர்மையானவராக இருந்தாலும் போட்டதை எடுத்திட்டு பண்ணுவோமே என்று ஆரம்பித்து ஊழலில் பிஹெஜ்டி வாங்கிவிட்டுதான் ஓய்வார்.

மக்களின் பங்களிப்பு அவசியம் இங்கே. தேர்தல் துறை, தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பட்டியலை, அம்மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதி சரிபார்க்கப்பட்ட அவ்வேட்பாளர்களுக்கு ஒரு கணக்கை ஆரம்பித்து, அதில் மக்களின் நிதிப்பங்களிப்பை சேர்க்க செய்யவேண்டும் (இது கட்சிகள் செய்யும் உண்டியல் குலுக்கல்களுக்கு மாற்று தான்). அதிலிருந்தே அவர்கள் செலவுச் செய்து தேர்தலை சந்திக்கவேண்டும். வேண்டுமானால் குறைந்தபட்ச தொகையாக வேட்பாளரின் பங்களிப்பு இருக்கலாம். இதனால் மக்களின் ஈடுபாடு தேர்தலில் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் பிரதிநிதியை கண்டெடுக்க முனைவார்கள், அவர்களுக்கு உதவிச் சேர்ப்பார்கள், மற்றும் தேர்தல் நாளில் அவர்களின் ஓட்டும் அதிகமாகலாம். இப்போது வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கும் வலைத்தகவல் தொடர்பினால் இது சாத்தியமே. வெளிப்படையான அணுகுமுறை அதிகரிக்கும் இதனால்.
***
வெளிப்படை. இந்த படத்தைப் பாருங்கள். இது ஒரு IAS ஆபிசர் அலுவலக அறையில் cctv -யால் எடுக்கப்பட்டதாம்.


                                இமேஜ்: பெங்களூர் மிர்ரர்.

தவறு. இது ஒன்றும் 'ஸ்டிங் ஆபெரசன்' இல்லை. அந்த அரசு அதிகாரியே தன்அலுவலக அறையில் பொருத்தி, அதனுள்ளேயான நடவடிக்கைகளை உலகுக்கு தெரியப்படுத்துகிறார். இடம்: பெங்களூர் எலெக்ட்ரிசிட்டி போர்டின் எம்டி அறை. அந்த முன்மாதிரி காரியத்தை செய்தவர் ஒரு தமிழர் (இப்படியும் ஒரு தமிழர்). பெயர் திரு. மணிவண்ணன்.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில் வெளிவரும். அதில் அவரின் பிரத்யோகப் பேட்டி இடம்பெற முயர்ச்சிக்றேன். என் ஆத்மா நண்பரின் நண்பர்; பல பின்னனி தகவல்களைத் தெரிவித்துள்ளார்.அதனால் சாத்தியப்படலாம். இப்போதைக்கு இதை கிளிக்குங்கள்.
***

சில நாட்களாகவே இடதுகால் கட்டைவிரலில் வலி. இன்று அது அதிகமாகவே அலுவலக இடையில் கிளம்பி, என் மனைவியை அழைத்துக்கொண்டு அப்பலோ கிளினிக்கு சென்றேன். சரியான இடத்தை ஒரே விரலால் அழுத்தி என்னை அலற வைத்துவிட்ட டாக்டர், வேலைப்பளு கொடுக்கும் மனழுத்ததை காரணித்து யூரியாவில் முடிச்சிட்டார். இரத்தத்தை பரிசோதிக்க சொல்லி அந்த அறைக்கு வழியனுப்பினார். மனைவி என்எதிரே நிற்க, தமிழர் போலிருந்த அந்த நர்ஸ் சிரிஞ்சை ரெடியிட்டார். முகத்தை நிர்மலமாக வைத்து என்மனைவி முகத்தை பார்த்தபடி, சிரஞ்சின் நீடிலை என் கைநரம்பில் உள்வாங்கி அதன் வெற்றிடத்தை சிவப்பினால் நிரப்பினேன். மனைவி சற்று ஆச்சர்யமாக "வலிக்கலையா?" என்றார். "உன் முகத்தை பார்திருந்தேனில்லையா" என்று அந்தப் பந்தை சிக்சருக்கு அனுப்பினேன். அதற்க்கு "அதில்லை, எனக்கு கூட இவர்கள் முன்பு வலிக்காமல்-தான் எடுத்தார்கள், அதை கன்பிர்ம் செய்தேன்" "குட் வொர்க்" என்றார் அந்த நர்சைப் பார்த்து. அவர் "பழக்கம்-தான் மேடம். மூன்று வருட அனுபவம். இருந்தாலும் சார் சொன்னது நல்லா இருந்த்தது. வெளியே இப்படி பேசுறாரே, வீட்டில் என்ன பேசுவார்?! பொறாமையா இருக்கு" ஆச்சர்யப்பட்டார். என் மனைவி "அவர் வெளியில் பேசுவதுதான். வீட்டில் ஒன்றுமில்லை " என்றுக் கூறி எல்லைகோட்டைத் தாண்டி பந்தை உள்ளேதள்ளி அதை கேட்சும் பிடித்தார். கங்குலிக் கனக்காய் என் அதிர்ஷ்டத்தை நொந்தப்படி வீடு திரும்பினேன் ஓய்வெடுக்க.
***
டிவியில் பழைய "மாயாபஜார்". என்டியார் கிச்சுவாக வெளுத்துக்கட்ட, நம்பியார் சகுனியாக நரித்தனம்காட்ட, ஜெமினி அபிமன்யுவாய் துள்ள, ரங்காராவும், சாவித்ரியும் முறையே கடோத்கஜனாகவும், பலராமர் பெண்ணாகவும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுகொண்டிரந்தனர். தங்கவேல் வேறு நடுவில் இரகளையுடன். கூர்மையான மற்றும் எள்ளலான வசனங்கள். அதிலொன்று - 'குதுகுலமாயிருக்கையில் குதர்க்கம் கூடாது' மற்றும் நம்பியாரை அருகில் வைத்துக்கொண்டு என்டியார் சொல்லும் " சகுனி இந்த வீட்டிலிருக்க, அசல் சனி எந்த வீட்டில் இருந்தாலென்ன?' குத்தல். பாடல்கள் "ஆகா இன்ப நிலாவினிலே" வும் "கல்யாண சமையல் சாதமும்" காதலும் நகைச்சுவையாகவும் மனதை வென்றன. மொத்தத்தில் நல்ல ஒய்வு.
***
.

Tuesday, February 22, 2011

மாடுகள் - மேயறதும், நக்கறதும்.

"ர்ர்ரிட்டது" என் செல்பேசி இன்றுக்காலையில்.
அழைப்பையேற்று சொன்னேன் 'வணக்கம், ஜாக்கி'.
"அவரு 'வணக்கம் ஜாக்கி' ன்னு சொல்றாரு, நீங்களே பேசுங்க" என்கிற பெண் குரலுக்குப் பின் ஜாக்கி " காலை வணக்கம் யுவா, இதுதான் என் லோக்கல் எண்" என்றார்.
அடடா, சகோதரிப் போல... ஜாக்கி ஒரு கலாட்டா செய்யஇருந்ததைக் காலியாக்கிட்டேனோ என்றேண்ணியப்படி, பதிலுரைத்தேன் "அதான் மழை காட்டிகொடுத்துவிட்டதே, பெங்களுருக்கு ஒரு நல்லவர் விஜயம்-னு".
அவர் கொடுத்தது ஒரு தெய்வீகச் சிரிப்பு பதிலாக " ஹஹஹ்ஹா".

மேலும் மிகச்சிறிய உரையாடலுக்கு பிறகு, அலுவலகத்துக்கு கிளம்புவதிலுள்ளேன் என்கையில் அவர் சொன்னார் " எங்கம்மா சொல்லியிருக்காங்க மேயற மாட்டை நக்கற மாடு கெடுக்ககூடாதுன்னு... நீங்க கெளம்புங்க பின்னர் பேசுவோம்".
நானும் குட்டை, மட்டை -னு ஏதோ ஆரம்பித்து, அதுக்கு இது செட்டாகாதே என்று பரஸ்பரம் இணைப்பைத் துண்டித்தோம். ஆனால் என் எண்ணங்கள் தொடரிட்டன. விளைவு இந்தப் பதிவு.

எது மேயற மாடு? எது நக்கிற மாடு?. இந்த சொல்வாடை பொதுவாக இருப்பதுதான். சிலருக்கு போன தலைமுறை சொற்றொடர், திட்டுவதற்கு.

மேய்வது வேலைசெய்வதாம். நக்குவது ஓபி-யடிப்பதாம் அல்லது வேலைஇல்லாததாம்.

கோடைகால விடுமுறைக்கு ஊரிலிருக்கும்போது நடந்தது இது. தாத்தாவின் மளிகைக்கடைக்கு சரக்கெடுக்க என் மாமாப்பையன் சைக்கிளில் பக்கத்துக்கு நகரத்திற்கு செல்வது வழக்கம். அவன் என்னை விட ஒன்றிரண்டு வயதுதான் மூத்தவன். அன்றைக்கு செல்லும்போது, நானும் பின் கேரியரில் தொத்திக்கொண்டு உதவிப்பெடலிடலானேன். பாத்துபோய்விட்டு வாங்க என்றார் எங்கள் ஆயா.
வெயில் காலையிலிருந்து மதியத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. நகரத்தில் வியர்வைப் பொங்க நுழைந்து கடைத்தேருக்குப் போகும் வழியில் ஒரு சினிமா போஸ்டர். "Hands of steel " - மிரட்டியது. நான் பாண்டுவின் (அவன் பெயர்) முதுகைச் சுரண்டினேன். என்பார்வை போகும் பாதை வழியே போஸ்டரைப்பார்த்தான். ஒன்றும் பேசவில்லை. அடிக்கபோகும் கமிழனை கூட்டிகழித்தவனைபோல் சைக்கிளைத் திருப்பினான் திரையரங்கை நோக்கி. இங்க்லீஷ் படந்தானே சீக்கிரம் முடிஞ்சிடும் - என்பது சமாதானம்.

இடைவேளை சமோசா, முறுக்கோடு, படம் பார்த்து, கொடுத்த காசுக்கு குறைவில்லாமிருந்த மகிழ்ச்சியில், மளிகைச்சரக்கோடு வீடு திரும்பலானோம். வழியில் பாண்டு சொன்னான் "தோ பார், நீ ஊர்லிருந்து வந்திருக்கே. என்னன்னு கேட்ட உன்ன சொல்றேன். நீ பார்த்துக்கோ;உன்னை திட்டமாட்டாங்க". டீல் ஒகேவுடன் கடையையடைந்தோம்.

தாத்தா கல்லாப்பொட்டியுலும், கேட்டச் சரக்கை எடுத்துகொடுக்க ஆயா, பக்கத்தில் தராசுலருகிலும் அமர்ந்திருந்தனர். ஸ்டாண்ட் போட்டு சைக்கிளை நிலைக்கொண்டுவருவதற்க்கு முன்னரே "என்னடா லேட்டு?" என்ற தாத்தாவின் அதிர்ந்த கேள்வியால் நிலையிழந்தோம். "கஸ்டமரு எவ்ளோ நேரமா காத்துனிருக்கார் பாருங்க" என்று தொடர்ந்தார். மேல்துண்டோடு, சவரம் செய்யப்படாத, வெண்மை கொஞ்சம் தூக்கலாகஇருந்த மூன்றுநாள் தாடியோடு வெளிபெஞ்சில் உட்கார்ந்திருந்தவரை அப்போதுதான் லுக்கிட்டோம். ஒரு நமநமப்போடு அந்தப் பெருசு இருந்ததாகப்பட்டது. அப்படியென்ன சரக்காயிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், பாண்டு பையிலிருந்த அந்த 301 பீடிக்கட்டையில் ஒன்றை பிரித்துக் கொடுத்தான். தாத்தாவின் முன்னர் கேள்விக்கு பதில்சொல்லும் விதமாக, ஆயா என்னைப்பார்த்து "இவனாலத் தானிருக்கும்" என்றார் உறுதியாக. பீடியில் ஒன்றைப்பத்த வைத்தப்படியே "அக்கா கேட்டதுயில்ல... மேயற மாட்ட நக்கிற மாடு கெடுத்துருக்கும்" என்று வாயால் பின்னூட்டம் அடித்து நடையைக்கட்டியது அந்தப் பெருசு.

அவரின் முதுகை வெறித்தேன் "கணக்குச் சொல்லி வாங்கிப்போக வேறந்த இடமும் இல்லாதாலே, இருந்து வாங்கிபோற நீ, இந்த கருத்தைச் சொல்றியா?" என்று கடுப்புடன் நினைத்தவாறே.

இப்படியாக நாம் ஒவ்வொருவரும் கேட்டுருக்கக்கூடிய ஒரு சொல்வாடை தான், வெவ்வேறு சந்தர்ப்பத்தில்.



எனக்கென்னம்மோ நக்கற மாடு கொஞ்சம் விவரமோ என்றுத் தோன்றுகிறது. பின்னே?... நல்லா மேயவிட்டு, உடம்பை தேத்தவிட்டு,... காம்பு பிழியக் கறக்கின்ற அல்லது நுரைத்தள்ள வண்டியிழுத்த கொடுமையெல்லாம் அனுபவித்து, சரி இனிமேல் நோஞ்சானகவே இருப்பது உத்தமம் என்று நக்கிக்கொண்டிருக்கலாம். அதன் அனுபவப்பாடம் மூலம் மேயறதை மாற்ற முயற்சித்திருக்கலாம்.
நாம் அதை, கெடுப்பது என்கிறோம். இந்த மனிதர்களே மோசந்தான்.

Friday, February 18, 2011

பயம் நல்லது!

'வீரம்'னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது - இது ஒரு படத்தில் கமல் சொன்னது, ரேபான் கண்ணாடியணிந்து கண்களை மறைத்தபடி.

'அட இது கொஞ்சம் சுலபம் போல' என்று நினைத்து, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல், ஓரிரு எதிர்-வார்த்தைகளை உதிர்த்து, சில சமயம் சில மனிதர்களை நேர்க்கொண்டாலும், ஆடும் கால்கள் உண்மையை "நான் உள்ளேன், ஐயா " என்கின்றன.

'இளங்கன்று பயமறியாது' என்பார்கள். என் இளமைக் கால ஞாபகங்களில் பயங்களும், தயக்கங்களும்-தான் தங்கள் BookMarks - ஐ போட்டுவைத்துள்ளன. அந்த தயக்கங்களும் பயங்களால் நேர்ந்தவைதான்.


மூன்றாம் வயதில், அப்பா என்னருகில் உட்கார்ந்து தொடைகள் சிவக்க, "அ-ஆ" "A -B " க்களை என் மண்டையில் ஏற்றியபோது - பயம். அடிகளை தவிர்க்க "அ-ஆ" "A -B " க்களோடு சமரசம் செய்துக்கொண்டு, அவைகளை மண்டையில் உட்காரவைத்தேன். விளைவு, அது என்னை வகுப்பில் முதலிரண்டு மாணவானாக உட்காரவைத்தது.

ஒழுக்கமற்றோ, சுத்தமற்றோ இருந்தால் பள்ளியிற் விழுகின்ற பிரம்படியும், போடுகின்ற முட்டிக்கால்களும், ஆசிரியர்களின் அசூசை பார்வைகளும் - பயம். வசதியில்லாவிட்டாலும் இருப்பதைக்கொண்டே என்னை "பளிச்'சென்று காட்டியும், ஈயாடினாலும் தலையாட்டாமல் ஆசிரியரை நேர்ப்பார்வையுடன் 'கவனி'த்த வகுப்புக்களாலும், அது என்னை வகுப்புத் தலைவராக்கியது.

பள்ளிமதியஉணவு இடைவேளையில், தெருவில் பசங்களோடு ஓடிப்பிடித்து விளையாடுகையில் கத்தி உச்சரித்த "மயிர்", மிதிவண்டியில் போன ஒருவரை நிறுத்தி "ஏம்பா... பார்க்க நல்லபுள்ளை மாதிரிருக்க... ஏன் கெட்டவார்த்த பேசுற?" என்று அதட்ட வைத்தது. அதுமுதல் வெளியிடங்களில் தெளிக்கப்படும் 'ஒரு சொல்'களும், கூரியப் பார்வைவீச்சுக்களும் - பயம். நிதானித்து, சற்று தயக்கத்தோடும் வெளியிடங்களில் என்னை வெளிப்படவைக்க, அது வாங்கிக்கொடுத்த பட்டம் "நல்ல புள்ளை".

அப்பா வாரயிறுதி நாட்களில் வெளியூர் செல்லும்போதெல்லாம், திரும்பும் நேரம் வருகையில் வீட்டுத் திண்ணையில், தெருவில் நின்று எதிர்ப்பார்க்கையில், மனதில் எழும் 'விபத்து' கற்பனைகளும், அது தரும் " நாளை பிறகென்ன?" என்ற வெறுமைகளும் அடிவயிற்றில் தந்த - பயம். வருடங்களை வீணாக்காமல், வாய்ப்புக்களை நழுவவிடாமல் செய்து, அது வாங்கிகொடுத்தது ஒரு வேலை -குறைந்தபட்ச வருமானத்துடன் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்திசெய்ய.

பயங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டுடன், வெவ்வேறு சூழ்நிலைகளால், எனது அடிவயிற்றின் ஒரு உணர்வாய், ஒவ்வொருக் காலகட்டத்திலும், இருந்து வந்திருக்கிறது இன்றும்கூட. பயங்களே என்னை பயப்பட வைத்தும், யோசிக்க வைத்தும், கவனிக்க வைத்தும், செயல்பட வைத்தும் இன்று ஒரு தலைமைப் பொறுப்பைக் கொடுத்துள்ளது குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி.

பிறகென்ன அது என்னை தவறே செய்ய வைத்ததுயில்லையா? செய்திருக்கிறேன். அவை கொடுத்த வடுக்களும், கொடுத்துக் கொண்டிருக்கும் வருத்தங்களுமே இப்போது என்னை மீண்டும் அதில் போடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றன.

அப்படி தடுக்காவிட்டால்?.... மெல்ல... எழுகிறது பயம்.

தொடர்வேன்.

Wednesday, February 16, 2011

பதிவு உலகில் ஒரு நேர் சந்திப்பு!

நான் பதிவுலகின் வாசகராகி கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாகி விட்டது. நான் ஒரு பதிவராகி - ஒரு நிமிடம்... அட அதில்லை... ஒரு நிமிடம் பொறுங்கள் என்று சொல்லவந்தேன், profile -அ பாத்துட்டு வர்றனும்-லே.
சரி, நான் ஒரு பதிவராகி (சொல்லவே-இல்லைதான், மன்னியுங்கள்) கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகி விட்டது. அது எங்களுக்கு ஏழரை ஆகிவிட்டது-ன்னு டைமிங்-லாம் முயற்சிக்கக் கூடாது. அந்தளவுக்கு என்னத்தையாவது எழுதி உங்கள படிக்கவச்சாதானே. அப்படியும் ஒன்றிரண்டு எழுதி சில ஜாம்பவான்களுக்கு லின்கிட்டு பின்னூட்டமெல்லாம் வாங்கியது உண்மைதான். டவுட்னா போய் செக்- பண்ணிக்கோங்க (அப்படியாவது படிக்கட்டும்).

அதனால் நான் என்னை ஒரு பதிவராக முன்னிருத்தாமல், ஒரு சாதா வாசகனாகவே முன்னிருத்திக்கொள்ளத் தகுதிப்பட்டுள்ளேன். அதென்ன "சாதா" ? ஏன் 'ஸ்பெசல்" இல்லை?யென்றால் இல்லைதான். நான் பின்னூட்டமிடுவது மிக சொல்பம் அதில் கருத்து சொல்வது பல்பம்... இல்லை... அதைவிட சொல்பம். டைம் இல்லாமில்லை... "ந ப, ந ப" வோடு நிறுத்திக்கொள்வதில் ஒரு நிறைவு.

இந்நிலையில் பதிவுலக ஜாம்பவான்களில் ஒருவரான "ஜாக்கி" சேகரோடு ஒரு நேர் சந்திப்பு அதுவும் பெங்களூரில் நடந்தது. அதாவது நான் போய் அவரைப்பார்த்தேன் (ஹிஹி).

இதுவரையில் பதிவர்களோடு என் தொடர்பென்பது ஒரு பின்னூட்டம், ஒரு தொலைபேசி அழைப்பு, மற்றும் g -chat அவ்வளவ்வே. அதுவும் என் முதல் அழைப்பாக இருந்தது கார்க்கிக்கு. பிறகு எனக்கு முதல் அழைப்பாக இருந்தது மயிலிடமிருந்து. அதுவும் ஒரு g -chat மூலம் ஆரம்பித்து செல்பேசி அழைப்பில் முடிந்தது. இதையெல்லாம் வேறொரு பதிவில் தொடரவேண்டிய விடயங்கள். ஆகவே ஒரு தற்காலிக முற்றும் தற்பொழுது. என்ன? எழுந்திட்டிங்க... உட்காருங்க. முற்றும் இந்த பாரா சம்பந்தபட்டதுக்கு மட்டுமே.

ஜாக்கியுடனான அந்த சந்திப்பு நிகழ்ந்த இடம் ஒரு உணவகம். மதிய வேலை... அதனால் மதிய உணவுடனான ஒரு பகிர்தல். இருவருக்கும் நேரம் வரையருக்கபட்டிருந்தது. ஆனாலும் என்னை மிகவும் குளிர்வித்தார் அவரின் இயல்பான, தளர்வான வாய்மொழி மூலமும், உடல்மொழி மூலமும். பதிவில் படிப்பதை போன்றேருந்தது அவரின் நேர்பேச்சும். சற்று காரளாக, மொருவளாக, நிறைய யதார்த்தமாக, மற்றும் குறைவில்லாத வெளிப்படையாக. பேச்சின் மையம் (இலக்கிய) வாசிப்பதின் ஆரம்பமான சுஜாதா, பாலகுமாரன் என்றேருந்தது. அவற்றின் ஊடாகவே பரஸ்பர சுய அறிமுகங்களும் நடந்தன.

பக்கத்து ஊர்காரர்களாக வேறு இருந்ததால் பேச்சினிடையே நிறைய இளந்தளிர் இடக்குறிப்புகள், நிகழ்வுக்குறிப்புகளுடன் வந்துவிழுந்த வண்ணமிருந்தன. இருவரும் ஒரே தள(ல)தில் இருப்பதாக அவரே கூறியபோது, சின்ன மகிழ்ச்சி மனதில் (பிரபலமாக இருப்பதை தவிரஎன்று நினைக்கிறேன்).

மொத்தத்தில் நாவிற்கு இரு சுவையுடனாக (உரை மற்றும் உணவு)முடிந்தது ஒரு ஆரம்பமான அந்த சந்திப்பு.

நன்றி ஜாக்கி!

பின்குறிப்பு: புகைப்படங்களை நான் எடுக்கவில்லை. 'சரக்கு'-இருக்கும்போது 'சைட் டிஷ்' போதைய்யேத்ரன்னு குதிக்கக்கூடாதுயில்லே ;-)