Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Thursday, March 24, 2011

வகை-தொகை:24/03/11

தரம் - என்றால் ஜப்பான் தான் ஞாபகத்தில் வரும். ஆனால் என்ன நடக்கிறது அங்கே? என் தொழில்நுட்ப மேலாளர் அடிக்கடி மேற்கோள் காட்டுவார் டொயடாவின் கோட்பாடுகள் (Toyata's principles)பற்றி. அங்கே ஒரு தகராறு, ஒரு கார்பகுதியை தவறாக தேர்ந்தெடுத்ததால். பிசாத்து பெறாத ஃப்ளோர் மேட் என்பதாலோ? கோடிக்கணக்கில் தண்டம் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது பரவாயில்லை, ஏதோ ஒரு கம்பெனியும் சில உயிர்களும் சம்பந்தபட்டது என்று வைத்துக்கொண்டால். ஆனால் அணுமின் உலை விடயம் அவ்வளவு லேசில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்றில்லை. அட நம்ம நாடுதான் ஒரு தப்பான தட்டுமேலே இருக்கே, அதானாலே பூகம்பத்திற்கு பஞ்சமில்லையே-னு ஒரு கூடுதல் பொருப்பு (ஒரு சின்ன பொறுப்புகூட இல்லையேன்னு  சின்ன 'ர'  போட்டுட்டேன்)   இருக்க வேணாம்? IAEA-வின் எச்சரிக்கையை புறந்தள்ளியாச்சே. எந்த சிஸ்டமும் (பாதுகாப்போ,  தரமோ,  மேலாண்மையோ,  தயாரிப்போ)  ஒரு தொடர்ந்த மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும் காலத்தின் கோலங்களை கணக்கில் கொண்டு. மாற்றங்கள் அவசியமானவை. இல்லையேல் அம்பேல்தான்.

ஒரு ஜப்பானியரின் கடைப்பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாகிவிட்டன இப்போது நடந்த கோரத்தில். ஆனால் அடுத்த நாளே ஒரு அறிவிப்பு பலகை அவர் கடையின் வாசலில் - " எரிந்தழிந்தது எனது உடமைகள் மட்டுமே, அதிர்ஷ்டவசமாக என் நம்பிக்கையும், உறுதியும் எந்த சேதாரமுமில்லாமல் இருக்கின்றன... வியாபரம் திங்களிலிருந்து இயங்கும்!!!". இனி  "ஃப்னிக்ஸ் பறவை"யை    உதாரணிப்பதைவிட, ஜப்பானியனை" உதாரணிக்கலாம் மீண்டெழுவதற்கு.
---*---
மாற்றம் என்றவுடன் நம் தமிழ்நாட்டு தேர்தல் நிழலாடும். திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பளித்து கொண்டிருக்கிறார்கள் சில வருடங்களாக கேரளாவைப்போல். எனக்கென்னமோ இலையில் திமுகவின் இலவசங்கள் வந்து விழுந்தாலும் இலைக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகப் படுகிறது. இல்லையேல்   'தொங்களில்'  மாட்ட நேரலாம். நம்மக்களை கணிப்பது கடினமே!

கலைஞரின் சொந்த-குடும்பங்கள் வெர்சஸ் அம்மாவின் தத்து-குடும்பம் என்பதில் மக்கள் கொஞ்சமே குழம்பியிருக்கிறார்கள். முதல் குடும்ப(ங்க)த்தில் இரத்த உறவு உள்ளதால் கலைஞருக்குப்பின் தலையெடுக்க திமுகவால் முடியும். ஆனால் இந்த குடும்பத்தில் அதுயில்லையாகயால், தத்து-குடும்பம், எது மாட்டியிருந்தாலும், அம்மாவை சற்று சுயமாகவிட்டால் கட்சியும் பிழைக்கும் அவங்களும் கூடவே. இல்லையேல் அம்பேல்தான்.
---*---
தத்து-குடும்பம் என்றதும் 'மிடாஸ்' ஞாபகத்தில் வந்து ஒரு தண்ணி மேட்டரை எழுதவைக்கிறது. சில நாட்களுக்கு முன் கோரமங்களா ஸ்பென்சரில் நண்பருக்கு தண்ணி வாங்கப்போனோம். சத்தியமாக அவர் குடிக்கமட்டுமே... ஏனெனில் அப்போதுதான் என் தங்கமணி அருளியிருந்த என் கோட்டா முடிந்திருந்தது. போனால், அங்கு ஒரு ப்ரமோஷன் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞன் தன் கையிருந்த வட்டத்தாளில் ஏதோ ஒன்றை ஸ்பிரெயிட்டு வருகிறர்களிடம் நுகரச் சொல்ல, இன்னொருவர் அதை தன் செல்லில் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.


                    (கையிலும் முகத்திலும் ஸ்பிரேவோடு அவ்விளைஞன்)

என்னிடமும் ஒன்றை நீட்டினான் அந்த இளைஞன் ஸ்பிரெயிட்டு. நுகர, எலுமிச்சை வாசனையடித்தது. சரி, தண்ணியடிப்பவர்களுக்கான "வாய் புத்துணர்வூட்டான் (Mouth Freshner)" போலிருக்கிறது என்று, "என்ன மேக்?"... என்றேன். அவன் சொன்னான் "சார், இது ஸ்மர்ன் ஆஃப் வாட்கா. புது "லைம்" ஃப்ளேவர்... அடிச்சிங்கனா வாசனை வராது". நான் "அப்படியா?! பின்னயேன் தாள்ல அடிக்கிற... என் நாக்குல அடிக்க வேண்டியதுதானே?!!!" என்றேன் ஆவலுடன். மேலும்..."ஏன் இந்த போலீஸ் ஊதானில் மாட்டாதமாதிரி ஒரு சரக்க கண்டுபிடிக்க சொல்றதுதானே" என்றதற்கு "முதல்ல உங்களை காற்றில் ஊதச்சொல்லிதான் முகர்வார்கள். அப்பவே தப்பிக்கலாம் இதை அடித்திருந்தீர்களானால்" பதிலுரைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அந்த போட்டாவை என் நண்பரின் செல்லுக்கு "நீலபல்" தொழில்நுட்ப உதவியால் பிரதியெடுத்துக்கொண்டு "என் ப்ளாக்கில் எழுதுவேன், பரிசோதித்தப் பின்னர்" என்று கூறி அந்த சரக்கில் 'வ' இல்லையாதலால் வேறொன்றை எடுத்துக்கொண்டு, பில் கவுன்டர் நோக்கி நடந்தோம். பின்னாலே ஓடிவந்த அவ்விளைஞன் ஒரு வேண்டுகோளை விடுத்தான்.

அதைப்பார்க்குமுன் என் பரிசோதனைப்பற்றி...

பிறிதொரு நாளில் அந்த பரிசோதனையும் நடக்க வாய்ந்தது  நம் ஜாக்கியுடன். இரண்டுபேருமே உணர்ந்தோம்  சிப்பும்போது அதன் எதிர்த்தடிக்காத தன்மையும், பிறகு ஆல்கஹால் நாற்றம் எழாத குணத்தையும். வீட்டுக்கு சென்றால், ஒரு டெஸ்டிங்கும் இல்லை. ஆக... பரிசோதனை வெற்றி!. ஏதோ என்னால் முடிந்த தகவலைப் பகிர்ந்துள்ளேன். இனி நீங்களாச்சி ஸ்மர்ன் லைம்-ஆச்சி. ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் - "DRINK RESPONSIBLY - அதாவுது, சைட்டிஷ் எந்த வறுத்த பருப்பா இருந்தாலும், பொறுப்பா குடிங்க!"

இந்தயிடத்தில் ஜாக்கி- அவர்களுக்கு என் மனமுவர்ந்த வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன். உங்களுக்குதான் தெரியுமே எதுக்குனு.

மீண்டும் அந்த வேண்டுகோள் விடயம்... "சார், நான் காலேஜ் ஸ்டூடண்ட். இது பார்ட்டைம் வேலை. ப்ளீஸ்... ப்ளாக்குல போட்டோ போடும்போது என் உருவம் வராம பார்த்துக்குங்க" என்பதுதான் அது. அதிர்ந்தேன்... இந்த ஆல்கஹால் கம்பெனிகளுக்கு "PROMOTE RESPONSIBLY" என்று சொல்லவேண்டும்.

5 comments:

 1. உண்மைதான் யுவா...பினிக்ஸ் மறு பெயர் ஜப்பான்...

  சிம்ரன் ஆப் லைம் ஸ்மல்லே இல்லை செமை அதைவிட காரை ஒரு ஒரத்தில் நிறுத்தி பரோட்டாவும் சிக்கன் குருமாவும், கிரல் சிக்கனும் சாப்பிட்டோமே.. அந்த இரவு உணவை மறக்கவே முடியாது....

  வாழ்த்துக்கு நன்றி யுவா...

  ReplyDelete
 2. நன்றி ஜாக்கி,

  அந்த ஓர் இரவு ரம்மியமாகத்தானிருந்தது!

  மீண்டும் விரைவில் சந்திப்போம்!!!

  ReplyDelete
 3. உங்க‌ளை இப்போதுதான் ப‌டிக்கின்றேன்.. இய‌ல்பான‌ ந‌டை..வாழ்த்துக்க‌ள்

  ReplyDelete
 4. நன்றி அஹ‌ம‌து இர்ஷாத்,

  வருகைக்கும் உற்சாகத்திற்கும்...

  ReplyDelete
 5. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  ReplyDelete