Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Wednesday, February 16, 2011

பதிவு உலகில் ஒரு நேர் சந்திப்பு!

நான் பதிவுலகின் வாசகராகி கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாகி விட்டது. நான் ஒரு பதிவராகி - ஒரு நிமிடம்... அட அதில்லை... ஒரு நிமிடம் பொறுங்கள் என்று சொல்லவந்தேன், profile -அ பாத்துட்டு வர்றனும்-லே.
சரி, நான் ஒரு பதிவராகி (சொல்லவே-இல்லைதான், மன்னியுங்கள்) கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகி விட்டது. அது எங்களுக்கு ஏழரை ஆகிவிட்டது-ன்னு டைமிங்-லாம் முயற்சிக்கக் கூடாது. அந்தளவுக்கு என்னத்தையாவது எழுதி உங்கள படிக்கவச்சாதானே. அப்படியும் ஒன்றிரண்டு எழுதி சில ஜாம்பவான்களுக்கு லின்கிட்டு பின்னூட்டமெல்லாம் வாங்கியது உண்மைதான். டவுட்னா போய் செக்- பண்ணிக்கோங்க (அப்படியாவது படிக்கட்டும்).

அதனால் நான் என்னை ஒரு பதிவராக முன்னிருத்தாமல், ஒரு சாதா வாசகனாகவே முன்னிருத்திக்கொள்ளத் தகுதிப்பட்டுள்ளேன். அதென்ன "சாதா" ? ஏன் 'ஸ்பெசல்" இல்லை?யென்றால் இல்லைதான். நான் பின்னூட்டமிடுவது மிக சொல்பம் அதில் கருத்து சொல்வது பல்பம்... இல்லை... அதைவிட சொல்பம். டைம் இல்லாமில்லை... "ந ப, ந ப" வோடு நிறுத்திக்கொள்வதில் ஒரு நிறைவு.

இந்நிலையில் பதிவுலக ஜாம்பவான்களில் ஒருவரான "ஜாக்கி" சேகரோடு ஒரு நேர் சந்திப்பு அதுவும் பெங்களூரில் நடந்தது. அதாவது நான் போய் அவரைப்பார்த்தேன் (ஹிஹி).

இதுவரையில் பதிவர்களோடு என் தொடர்பென்பது ஒரு பின்னூட்டம், ஒரு தொலைபேசி அழைப்பு, மற்றும் g -chat அவ்வளவ்வே. அதுவும் என் முதல் அழைப்பாக இருந்தது கார்க்கிக்கு. பிறகு எனக்கு முதல் அழைப்பாக இருந்தது மயிலிடமிருந்து. அதுவும் ஒரு g -chat மூலம் ஆரம்பித்து செல்பேசி அழைப்பில் முடிந்தது. இதையெல்லாம் வேறொரு பதிவில் தொடரவேண்டிய விடயங்கள். ஆகவே ஒரு தற்காலிக முற்றும் தற்பொழுது. என்ன? எழுந்திட்டிங்க... உட்காருங்க. முற்றும் இந்த பாரா சம்பந்தபட்டதுக்கு மட்டுமே.

ஜாக்கியுடனான அந்த சந்திப்பு நிகழ்ந்த இடம் ஒரு உணவகம். மதிய வேலை... அதனால் மதிய உணவுடனான ஒரு பகிர்தல். இருவருக்கும் நேரம் வரையருக்கபட்டிருந்தது. ஆனாலும் என்னை மிகவும் குளிர்வித்தார் அவரின் இயல்பான, தளர்வான வாய்மொழி மூலமும், உடல்மொழி மூலமும். பதிவில் படிப்பதை போன்றேருந்தது அவரின் நேர்பேச்சும். சற்று காரளாக, மொருவளாக, நிறைய யதார்த்தமாக, மற்றும் குறைவில்லாத வெளிப்படையாக. பேச்சின் மையம் (இலக்கிய) வாசிப்பதின் ஆரம்பமான சுஜாதா, பாலகுமாரன் என்றேருந்தது. அவற்றின் ஊடாகவே பரஸ்பர சுய அறிமுகங்களும் நடந்தன.

பக்கத்து ஊர்காரர்களாக வேறு இருந்ததால் பேச்சினிடையே நிறைய இளந்தளிர் இடக்குறிப்புகள், நிகழ்வுக்குறிப்புகளுடன் வந்துவிழுந்த வண்ணமிருந்தன. இருவரும் ஒரே தள(ல)தில் இருப்பதாக அவரே கூறியபோது, சின்ன மகிழ்ச்சி மனதில் (பிரபலமாக இருப்பதை தவிரஎன்று நினைக்கிறேன்).

மொத்தத்தில் நாவிற்கு இரு சுவையுடனாக (உரை மற்றும் உணவு)முடிந்தது ஒரு ஆரம்பமான அந்த சந்திப்பு.

நன்றி ஜாக்கி!

பின்குறிப்பு: புகைப்படங்களை நான் எடுக்கவில்லை. 'சரக்கு'-இருக்கும்போது 'சைட் டிஷ்' போதைய்யேத்ரன்னு குதிக்கக்கூடாதுயில்லே ;-)

8 comments:

 1. அண்ணே, தன்யனாயிட்டீங்க.சரி விடுங்க.எங்க அஞ்சா நெஞ்சன் ஜாக்கி அண்ணனுக்கு வெள்ளை மனசு. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.பகிர்வுக்கு நன்னி.

  ReplyDelete
 2. ஆமாம், நொள்ளை சொல்ல முடியாத வெள்ளை. நன்றி பின்னூட்டத்துக்கு மாரா!

  ReplyDelete
 3. மறக்க முடியாத ஒரு சந்திப்பு.. நிறைய பேசினோம்.. ரொம்ப நாள் சந்தித்தது போல இருந்திச்சி... அதுல ஒரு சின்ன முகம் சுளிப்புகூட இல்லை என்பதே அந்த சந்திப்பின் வெற்றி...

  ReplyDelete
 4. மரா நாம சந்திச்சோமா? எங்க்ன்னு சொல்ல முடியுமா?

  ReplyDelete
 5. ஆமாம் ஜாக்கி, அதனால் தான் பதிவிட்டு கல்வெட்டில் செதிக்கியுள்ளேன்.

  ReplyDelete
 6. நான் அடுத்த முறை வரும்போது உங்களை சந்திக்க ஆவல்..நன்றி..ஜாக்கி எளிமையாக மிரட்டும் மனிதர்...

  ReplyDelete
 7. ஆமாம்.வாருங்கள்...சந்திப்போம் அவசியம்.நன்றி ஜீ!

  ReplyDelete
 8. ஆகா...

  அண்ணனை நல்லா கவனிச்சிட்டீங்க போல..

  நண்பர்களை பகிர்வதில் சுகமே தனி தான் யுவா...

  ReplyDelete