Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Tuesday, November 23, 2010

நானும் படிக்கிறேன்!

சென்ற வாரத்தில் "பெங்களூர் புத்தக விழா"வில் சிலபலப் புத்தகங்களை உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, மற்றும் பெயர் ஞாபகத்தில் வராத (இதை எழுதும்போது... ஹிஹி) பதிப்பக ஸ்டால்களில் வாங்கினேன்.

அவைகளில் படித்து முடித்தவை - சிலரில் ஒருவனாகப் பிறந்து பலரை வென்று ஆண்டவனின் வரலாறு ஒன்று, தனது கூர்ந்த அவதானிப்பால் மட்டுமே பெட்ரோல் போடுபவன் நிலையிலிருந்து பெட்ரோல் தோண்டியவன் என்ற நிலைக்கு உயர்ந்தவனின் வாழ்க்கைப் பயணமொன்று, பிறகு எங்கிருந்தோ வந்தவனால் காக்கப்பட்டு, அவனின் வழித்தோன்றல்களால் அனுபவிக்க, வளர்க்கப்பட்டு இன்றொரு அரண்மனையாக மட்டுமே நின்றுருக்கின்ற ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை ஒன்று.

விமர்சனங்கள் என்றில்லாமல் படித்தவைகளைப் பற்றி என் எண்ணங்களைப் பகிர ஆசை. வரும் நாட்களில் பார்ப்போம்...

3 comments:

  1. அதுசரி... இந்த 'பில்டப்'புக்லாம் ஒன்னும் கொறையில்லே! முதல்லே ஒன்னு இப்படித்தான் ஆரம்பிச்சே... இன்னாச்சு அது?

    ReplyDelete
  2. பகிருங்கள் படிக்கிறோம்..

    இதையும் படியுங்கள்..

    http://rameshspot.blogspot.com/2010/11/blog-post_23.html

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ரமேஷ்!

    ReplyDelete