Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Tuesday, November 23, 2010

ஒரு திட்டமிட்டச் சதி!

இது ஒரு திட்டமிட்டச் சதி. இதன் வலைப்பின்னல் பயங்கரமானது.

எந்தவொரு உலகக் குழுக்களின், இனங்களின், நாடுகளின் மற்றும் அமைப்புகளின் பயங்கரவாத ஆயுதங்களுக்கு கீழானதில்லை அது. அதைகளிடலாம் விடக் கொடுமையானது. நம்முள் ஊடுருவி இரத்தத்தினுள் இரண்டற கலந்து டின்ஏ-க்களை வசமாக்கி நம் வம்சங்களினூடே நகர்ந்து நாசமாக்கக்கூடியது.அதில் தாக்குதலுக்கு உள்ளாவதும், தாக்குபவரும் ஒன்றே.

இதனழகே அதன் செயல்திட்டம் தான். சகஜமாக்கு!!!

கேள்விப்பட வை!
பார்க்க வை!
பதட்டத்தைத் தணி!
அதனிடையே வளர வை!
பங்கேற்க வை!
சுகப்பட வை!
கேட்க வை!
கட்டளையாக்கு!
அழி.

ஒரு அணுஆயுதமோ, ஒரு உயிர்க்கொல்லும் கிருமியோ அல்லது விடமோ செய்ய முடியாத ஒன்று. ஒரு சமூகத்தை அதன் தலைமுறைகளுக்குள் ஊர்ந்துக் கொல்வது. ஜீன் சரிப்படுத்தலுக்கு அகப்படாதது. கையறு நிலையில் நிறுத்துவது.

அன்பளிப்பு - கையூட்டு - லஞ்சம்.

நான் நன்றாக தயார்செய்யப்பட்டுவிட்டேன். இருந்தும் போராடுகிறேன்...

ஒரு இடைத்தரகருடனும் - கொடுப்பதில்லை... எனக்கு தகுதியான பள்ளியில்/கல்லூரியில் படிப்பு!

ஒரு அலுவலருடனும் - இல்லை... வேலை என் தகுதிக்குத்தான்!

ஒரு ட்ராபிக் போலீசுடனும் - கொடுத்துப் பழக்கமில்லை... கொடுத்து அசிங்கப் பட வைப்பதில்லை... சார்ஜ் சீட்டைக் கொடுங்கள்!

ஒரு காவலருடனும் - எனக்கு எல்லா வகையிலும் பாத்திரமான நிலத்தில் ஆக்கிரமைப்பு...கொடுப்பதில்லை... கோர்ட்டில் வழக்கு!

இருந்தும் இழந்துக் கொண்டிருக்கிறேன். கவனிப்பு மங்குகின்றன. எதிர்ப்பின் வீரியம் குறைகிறது... வயது ஏற ஏற! அனுபவம் கூடக்கூட!!

காப்பாற்றுங்கள்!!!

நானும் படிக்கிறேன்!

சென்ற வாரத்தில் "பெங்களூர் புத்தக விழா"வில் சிலபலப் புத்தகங்களை உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, மற்றும் பெயர் ஞாபகத்தில் வராத (இதை எழுதும்போது... ஹிஹி) பதிப்பக ஸ்டால்களில் வாங்கினேன்.

அவைகளில் படித்து முடித்தவை - சிலரில் ஒருவனாகப் பிறந்து பலரை வென்று ஆண்டவனின் வரலாறு ஒன்று, தனது கூர்ந்த அவதானிப்பால் மட்டுமே பெட்ரோல் போடுபவன் நிலையிலிருந்து பெட்ரோல் தோண்டியவன் என்ற நிலைக்கு உயர்ந்தவனின் வாழ்க்கைப் பயணமொன்று, பிறகு எங்கிருந்தோ வந்தவனால் காக்கப்பட்டு, அவனின் வழித்தோன்றல்களால் அனுபவிக்க, வளர்க்கப்பட்டு இன்றொரு அரண்மனையாக மட்டுமே நின்றுருக்கின்ற ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை ஒன்று.

விமர்சனங்கள் என்றில்லாமல் படித்தவைகளைப் பற்றி என் எண்ணங்களைப் பகிர ஆசை. வரும் நாட்களில் பார்ப்போம்...