Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Monday, April 5, 2010

ரூட் மேப் 2

எழுதிப்பார்க்கிறேன்னு மனசிலயே எழுதியெழிதித் துடைத்திருந்தேன். இதோ தொடர்ந்துவிட்டேன் மேகத்தில் (clouds).

உயிர்மையில் சென்றமர்ந்து கட்டுரைகளின் தலைப்பை மேய்ந்ததில் அயர்ந்தன என் மூளைகள் (பெரு, சிறு இரண்டும்). சிறு திருத்தம்... முதலில் அசந்தன பிறகுதான் அயர்ந்தன. என் பள்ளிவயது முழுவதும் "பூந்தளிர்","அம்புலிமாமா", "ராணி, லயன், முத்து மற்றும் க்ளாஸிக் காமிக்ஸ்கள்", மேலும் அன்றைய மேல்வீட்டு அக்காவின் மொழிபெயர்ப்பின் தயவால் ஆங்கில "அமர்" காமிக்ஸ் - போன்றவைகளே (விடுபட்ட காமிக்ஸ்கள் மன்னிக்கவும்) நான் படிப்பதற்கு அகப்பட்டவையாகவும், தோதாகவும் (நம்ம லெவலுக்கு) இருந்தன.

பின் பள்ளிவகுப்பின் எண்ணிக்கை கூடக்கூட (7,8,9.. +1, +2 என்று), பிகேபி, சுபா, இராஜேஷ்குமார்... இவர்களின் நாவல்நாயகர்களான பரத், நரேந்திரன், மற்றும் விவேக் உள்ளிட்டோர் என் உள்ளத்தையும் சமயத்தில் உடலையும் (வீரம் பொங்குமில்ல) க்ரைம், உங்கள் ஜூனியர் மூலம் கொள்ளைக் கொண்டனர். நடுநடுவே புஷ்பா த.துரை, லஷ்மி, சாண்டில்யன்... லைப்ரரிகளின் (அரசு, தனியார்) உதவியால் சங்கர்லாலுடனும், கணேஷ்-வசந்த்-துடனும் துப்பரிந்துக்கொண்டிருந்தேன்.அசோகன் (பாக்கெட் நாவல்) சுஜாதாவை மாதநாவலுக்கு இறக்கியதாக (import என்றுக்கொள்ளவும்) ஒரு நினைவு. அதனால் நம்ம வாத்தியாரையும் ரூபாய் பத்துக்கோ பதினைந்துக்கோ வாசிக்கமுடிந்தது.

இவைகளை சேகரிக்க சில பெட்டிக்கடைகளையும் பல பழையப்புத்தக கடைகளையும் பள்ளி விட்டதும் முற்றுகையிட்டு நாலணா, ஐம்பது காசிலிருந்து ஐந்து, பத்து ரூபாக்கள்வரை செலவிடுவேன் நாள்தோரும். என் கணிசமான(!) பாக்கெட்மணியின் கணிசமான(!) தொகையை அவ்வாறே கொடுத்து என் இப்போதைய பாரலல் (parallel), லாடரல் (lateral) திங்கிங்கிற்கான விதையை விதைத்தேன். ஆம்... காமிக்ஸ்களும் நாவல்களும் என் சிந்தனை-கற்பனை திறன்களைத் தூண்டின என்றே சொல்வேன்.

பின்னர் +2 முடிந்து காலேஜ் செல்லும்தருவாயில் பாலகுமாரன் ஒரு நண்பர் வழியாக அறிமுகமாகி என்னையாட்க்கொண்டார்.

தொடர்வேன்...

No comments:

Post a Comment