Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Monday, December 21, 2009

ரூட் மேப்...

ப்ளாக்க ஆரம்பித்தாகிவிட்டப்பறம் (?!) என்ன எழுத‍‍லாம்னு யோசிக்க.. யோசிக்க... (என்னாது? ரூம் போட்டா...? நானெல்லாம் ரூம் போட்ரதுக்கே யோசிப்பவன்.) சரி, எப்படி இப்படி வந்தோம்னு எழுதலாம்னு முடிவிட்டேன் (முடிவு + விட்டேன்).

அதுக்குள்ளேவா... னு கேக்கறீங்க? பின்னே, எப்படிப் போனேன்னு தெரியாமெலயே நீங்க என்னைப் போக வச்சிட்டா.. அதுக்குதான்!

அதுவொரு பின்மதியப்பொழுது. சாப்பிட்டப்பிறகு, மூளை சற்றே அசரத்தொடங்கிய நேரம். அலுவலக விஷயங்களினி மங்கலாகும் என்றுதெளிந்து, கோட்டின் மேல் (online) ஏதாவுது தேடலாமென்று கணினியை துயிலெழுப்பினேன்.

ஒரு தெளிவு இங்கு. என‌க்கு எப்போதுமே மூளைக்கு சேர‌ வேண்டிய‌வையெல்லாம் அய‌ல் மொழியிலும் (உம்), ம‌ன‌துக்கு சேர‌ வேண்டிய‌வை தாய்மொழியிலும் ப‌டிக்க‌ வேண்டும்.

அதன்படி, கூகிளிடம் "டமில் சைட்ஸ்" யென தேடப்பணித்தேன். வந்தவைகளில் சிலபலவற்றை நோக்கி மற்றும் நீக்கியதில், உயிர்மையில் சென்றமர்ந்தேன்.

தொடரும்...

7 comments:

  1. என்ன எழுதறதுன்னு இந்தளவுக்கு யோசிச்சாலே கண்டிப்பாக நல்லாத்தான் எழுதப் போறீங்க.. வாழ்த்துக்கள்..
    Online என்றால் கோட்டின் மேலா?? நடத்துங்க.. :)

    ReplyDelete
  2. அண்ணே... என்னங்க இது??? இக்குள்ளூண்டு எழுதியிருக்கீங்க? :) :)

    நம்ம பதிவெல்லாம் பார்த்தீங்க இல்ல? ஒரு பாராவே.. இந்த சைஸுக்கு வரும்!!! :)

    சீக்கிரம்.. பெர்சா... எழுதுங்க தல!!

    //////என‌க்கு எப்போதுமே மூளைக்கு சேர‌ வேண்டிய‌வையெல்லாம் அய‌ல் மொழியிலும் (உம்), ம‌ன‌துக்கு சேர‌ வேண்டிய‌வை தாய்மொழியிலும் ப‌டிக்க‌ வேண்டும்///

    நான் படிக்கறதேயில்லீங்க. அப்புறம் எங்க மூளை, மனசு எல்லாம்! :(

    ReplyDelete
  3. அன்புடன்-மணிகண்டன்,

    நல்லாவே தட்டிக்கொடுக்கறீங்க... தெம்பு வருது!
    --------------------------------------------
    ஹாலிவுட் பாலா,

    நீங்க பார்ப்பதோட சரி...?!!! இப்படி ராக்கிங் செய்தா எப்பூடி? அவ்... Pre-நர்சரி சேரவர்ர என்னை Feynmanனோட‌ compare பண்றீங்க... அதுக்கெல்லாம் ரொம்ப மெனக்கெடனும்மாமே?... I will try it.

    நன்றி,
    Yuva

    ReplyDelete
  4. தக்குனூண்டு பதிவிலே இத்தனை மொக்கையா? நடத்துங்க சகா. சீக்கிரம் பெரிய ரேஞ்சுல, ச்சே பெரிய பதிவா எழுதி முத்திரையை பதிங்க

    ReplyDelete
  5. கார்க்கி,

    நேற்று உங்களுடன் பேசியப்பிறகு எழுதிய பதிவு இது (என்னடா, ஒன்றுமே இல்லாத ப்ளாக்கை லிங்குறேமே என்ற உணர்வில்...).
    நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

    நன்றி,
    Yuva

    அழைத்த அனைவருமே வந்து, கருத்தை பகிர்ந்த்மைக்கு மிக்க நன்றிகள்.எழுத வேண்டும் நிறைய.

    ReplyDelete
  6. யுவா
    மாறுப்பட்ட
    மனத்தினை
    நுகருகிறேன்-நின்
    வலைபூக்களில்
    பாராட்டுக்கள்....

    ReplyDelete
  7. நன்றி மணி, தங்கள் ப்ளாக்கின் நுழைவில் அடல்ட் வார்னிங்க் வருதே... விவகாரமில்லையே...

    ReplyDelete